அடுத்தடுத்து அதிர்ச்சி! இயக்குனர் கே விஸ்வநாத் இறந்த ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவரின் மனைவியும் மரணம்!

பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் உடல் நல குறைவு காரணமாக இம்மாதம் (பிப்ரவரி 3 ஆம் தேதி) உயிரிழந்த நிலையில், அவரைத் தொடர்ந்து அவரின் மனைவியும் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை உச்சகட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

veteran actor k viwanath  wife jayalakshmi passed away

தெலுங்கு திரையுலகில் எண்ணற்ற படங்களை இயக்கிய, இயக்குனர் கே.விஸ்வநாத் தன்னுடைய முதல் படத்திற்காகவே, சிறந்த அறிமுக இயக்குனருக்கான நந்தி விருதை பெற்றவர். இதை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, மலையாளம், உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் சில வெற்றிப்படங்களை இயக்கி மிகவும் பிரபலமானவர். குறிப்பாக தமிழில், நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, போன்ற காலத்தால் அழியாத படங்களை இயக்கியதோடு... சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். குறிப்பாக விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம், தனுஷின் யாரடி நீ மோகினி, கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், ரஜினிகாந்துடன் லிங்கா போன்ற படங்களில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 

veteran actor k viwanath  wife jayalakshmi passed away

மிக மோசமான கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்த ராஷ்மிகா மந்தனா..! சன்னி லியோனுக்கே போட்டியா?

திரைப்படம் இயக்குவது, நடிப்பை ஆகியவற்றை தாண்டி திரையுலகில் ஆடியோகிராபர், ஸ்கிரீன் பிலே ரைட்டர், என பன்முக திறமையோடு விளங்கியவர். 8 முறை நந்தி விருது, 6  முறை தேசிய விருது, 9 முறை ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் தாதா சாகேப் பால்கி விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் அண்மையில் தன்னுடைய 93 வயதில், வயது மூப்பு பிரச்சினை காரணமாக வரும் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த இவர்,  பிப்ரவரி 3 தேதி காலமானார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

veteran actor k viwanath  wife jayalakshmi passed away

50 ஆவது பிறந்தநாளை 'லியோ' படக்குழுவினருடன் கொண்டாடிய கெளதம் மேனன்..! வைரலாகும் புகைப்படம்..!

இவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இவரின் மனைவி ஜெயலட்சுமி விஸ்வநாத் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வின் காரணமாகவும், தன்னுடைய கணவரின் இறப்பாலும் மனதளவில் பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமி நேற்று மரணமடைந்ததா அவரின் குடும்பத்தினர் வேதனையோடு தெரிவித்துள்ளனர். இதையடுத்து... பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios