அரசியல் பதவி கிடைத்ததும்... செம்ம கெத்தாக நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்..! வைரலாகும் கலக்கல் போட்டோஸ்..!
நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி ஏற்று கொண்ட பின்னர், செம்ம கெத்தாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. முதல் முதலில் ரசிகர்கள் சேர்ந்து ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அதுவும் இவருக்கு தான். நடிப்பை தாண்டி அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் குஷ்பு ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த நிலையில், அதிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்தார்.
பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள இவர், கடந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தாலும், மீண்டும் அரசியல் பணியில் தீவிரம் காட்டி வந்தார்.
ரத்த காயங்களுடன் நடிகை சமந்தா..! அதிர்ச்சியோடு.. அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய புகைப்படம்..!
இதையடுத்து பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்புவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதற்கான பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், குஷ்புவிற்கு சமூக வலைதள மூலம் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பெண்களின் உரிமைக்காக பல்வேறு விஷயங்களில் போராடி வந்த குஷ்புவுக்கு, கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே இந்த பதவி பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதளத்தில் குஷ்பு நன்றி தெரிவித்து செம்ம கெத்தாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடுரோட்டில் ஆண் நபருடன் சண்டை போட்ட துணை நடிகை..! அத்துமீறியதாக பரபரப்பு குற்றச்சாட்டு..!
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எனது தலைவர் நரேந்திர மோடி அவர்களின் ஆசியோடும், ஷர்மா ரேகா ஆசியோடும் இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். பெண்களின் நலன்கள் அனைத்து துறையிலும் பாதுகாக்கப்பட உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், ஆதரவுகளையும், நான் விரும்புகிறேன் என கூறி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதை அடுத்து ரசிகர்கள் பலர் என்னதான் பதவி கிடைத்தாலும் குஷ்பு நடிகை என்பதை நிரூபிக்கும் விதமாக இது போன்ற விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதாக தெரிவித்து வருகிறார்கள்.