- Home
- Cinema
- Rajinikanth: ரஜினிக்காக மைக்கேல் ஜாக்சன் பாட இருந்தாரா? 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தகவல்
Rajinikanth: ரஜினிக்காக மைக்கேல் ஜாக்சன் பாட இருந்தாரா? 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தகவல்
Rajinikanth: ரஜினிக்காக மைக்கேல் ஜாக்சன் பாட இருந்தாரா? ஏ.ஆர். ரஹ்மான் - மைக்கேல் ஜாக்சன் இணைந்த இசை முயற்சி குறித்து எஸ். தமன் வெளியிட்ட ஆச்சரிய தகவல் வைரலாகி வருகிறது.

மைக்கேல் ஜாக்சன் - ரஜினிகாந்த் கூட்டணி
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மானும், மைக்கேல் ஜாக்சனும் இணைந்து ரஜினிகாந்த் படத்திற்காக ஒரு சிறப்பு பாடலை உருவாக்க திட்டமிட்டிருந்ததாக இசையமைப்பாளர் எஸ். தமன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் தற்போது கவனம் பெற்றுள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய எஸ். தமன், பிரபல பாடகர் ஹனுமன்கைண்டுடன் புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசை
அப்போது ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மைக்கேல் ஜாக்சன் இணைந்து உருவாக்கிய பாடல் குறித்த பழைய நினைவையும் அவர் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்திற்காக இருவரும் இணைந்து ஒரு வித்தியாசமான பாடலை உருவாக்க திட்டமிட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த தகவல் அப்போது நிறைவேறாமல் போன ஒரு மிகப்பெரிய இசை கூட்டணி மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.
Bigg Boss 10 : அன்சரின் அடாவடியால் அப்செட் ஆன ஷாதிகா... சாப்பிடாமல் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
ரஜினி எந்திரன் சுவாரஸ்ய தகவல்
ஏ.ஆர். ரஹ்மானும் மைக்கேல் ஜாக்சனும் சந்தித்து, ரஜினிகாந்த் நடித்த படத்திற்காக ஒரு சிறப்பு பாடலை உருவாக்குவது குறித்து திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மைக்கேல் ஜாக்சன் 2009ஆம் ஆண்டு மே மாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு அடுத்த மாதமே, அதாவது 2009 ஜூன் மாதத்தில் மைக்கேல் ஜாக்சன் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதனால் இருவரும் இணைந்து உருவாக்க இருந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் வெளியாகாமல் போனது.
மைக்கேல் ஜாக்சன் தமிழ் சினிமா
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் 2010ஆம் ஆண்டு வெளியானது. வெளியானபோது இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ரஜினிகாந்தின் திரைப்பயணத்திலும் முக்கியமான படமாக அமைந்தது. ஆனால் அந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மைக்கேல் ஜாக்சன் இணைந்து ஒரு பாடலை உருவாக்கியிருந்தால், அது இந்திய திரையுலகைத் தாண்டி உலக அளவில் பெரிய கவனத்தைப் பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். திட்டம் இருந்தாலும் அது செயல்பாட்டுக்கு வராமல் போனது ரசிகர்களுக்கு இன்றும் ஆச்சரியமான தகவலாகவே உள்ளது.
எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சன்
இதேபோல் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் சர்வதேச அளவில் ஒரு பாடலை உருவாக்கும் திட்டம் இருந்ததாக எஸ். தமன் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கிய அந்தப் படத்தின் ‘டாப்’ பாடலுக்காக பிரபல அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸை இணைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அந்த பாடலை ஆங்கிலத்தில் உருவாக்கி உலக அளவில் வெளியிடும் திட்டமும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படப்பிடிப்பு மற்றும் வெளியீட்டில் ஏற்பட்ட தாமதங்களால் அந்த திட்டமும் நிறைவேறாமல் போனதாக எஸ். தமன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சினிமா ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை உண்டாக்கி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

