- Home
- Cinema
- Raaka : அட்லீ படத்திற்கு கிடைத்த வேர்ல்டு லெவல் அங்கீகாரம்... ‘ராக்கா’ படைத்த கின்னஸ் சாதனை என்ன தெரியுமா?
Raaka : அட்லீ படத்திற்கு கிடைத்த வேர்ல்டு லெவல் அங்கீகாரம்... ‘ராக்கா’ படைத்த கின்னஸ் சாதனை என்ன தெரியுமா?
Raaka Movie Guinness World Record : அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ராக்கா திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Raaka Movie Guinness World Record
இயக்குநர் அட்லீ தற்போது அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து பிரம்மாண்டமான திரைப்படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். ‘ராக்கா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சைன்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் மீது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
Raaka: புஷ்பா ரூட்டுக்கு திரும்பும் ராக்கா.... மெகா பிளானை திடீரென மாற்றிய அட்லீ - காரணம் என்ன?
பிரம்மாண்டமாக உருவாகும் ராக்கா
குறிப்பாக, ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ‘ராக்கா’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் உள்ளிட்டோர் இப்படத்தில் இடம்பெறுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
கின்னஸ் சாதனை படைத்த ராக்கா
சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் பரவின. இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், ‘ராக்கா’ திரைப்படம் தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் 37 நடிகர்களை பதிவு செய்துள்ளதாகவும், இதற்காக கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
A global triumph in motion capture! 🏆🌎#Raaka sets a Guinness World Record for the 'Most People Motion-Captured in Real-Time', with 37 performers captured simultaneously ✨@alluarjun @Atlee_dir @GWR#Raaka #AlluArjun #Atlee #GuinnessWorldRecords pic.twitter.com/hotAxnrgfE
— Sun Pictures (@sunpictures) September 21, 2026
பிரம்மிப்பூட்டும் வீடியோ
இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 19 பேர் பங்கேற்ற மோஷன் கேப்ச்சர் பதிவு சாதனையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த எண்ணிக்கையை கடந்து தற்போது 37 நடிகர்களை ஒரே நேரத்தில் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த சாதனை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனைக்கான அங்கீகாரத்தை இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் இணைந்து பெற்றுக்கொண்டனர். ஏற்கனவே பிரம்மாண்டமான நட்சத்திரப் பட்டியல் மற்றும் வித்தியாசமான ஜானர் காரணமாக பேசப்பட்டு வரும் ‘ராக்கா’, தற்போது கின்னஸ் சாதனை செய்தி வெளியாகியிருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

