- Home
- Cinema
- Atlee : அறிவிருக்கா உனக்கு.. சொல்லனும்னா நேரா சொல்லு! விஜய் சேதுபதிக்கு தரமான பதிலடி தந்த விஜய்யின் தம்பி அட்லீ
Atlee : அறிவிருக்கா உனக்கு.. சொல்லனும்னா நேரா சொல்லு! விஜய் சேதுபதிக்கு தரமான பதிலடி தந்த விஜய்யின் தம்பி அட்லீ
Atlee Speech in Baththa Audio Launch : விஜய் சேதுபதி நடித்த பத்தா படத்தை தயாரித்துள்ள அட்லீ, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.

Atlee Speech in Baththa Audio Launch
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் பத்தா. அட்லீ தயாரித்துள்ள இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கி உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, அட்லீ உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். ஏனெனில், கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிரச்சனை வந்தால் எதிரணி மீது பழிபோட்டுவிட்டு ஓடுவது தலைவனுக்கான தகுதி இல்லை என பேசி இருந்தார். அவர் முதல்வர் விஜய்யை தான் மறைமுக விமர்சித்து இருக்கிறார் எனக்கூறி விஜய் ரசிகர்கள் அவரை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்தனர்.
விஜய் சேதுபதிக்கு பதிலடி கொடுத்த அட்லீ
இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்த நிலையில், இதுபற்றி வாய்திறக்காமல் இருந்தார் விஜய் சேதுபதி. அதனால் பத்தா ஆடியோ லாஞ்சில் இதுபற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த ஆடியோ லாஞ்சில் அவுட் ஆஃப் சிலபஸ் ஆக வந்து தயாரிப்பாளர் அட்லீ, மேடையில் ஏறி, ஒரு விஜய் ரசிகனாக குட்டி ஸ்டோரி மூலம் விஜய் சேதுபதிக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் பேசியதைக் கேட்டதும் விஜய் சேதுபதிக்கு முகமே மாறிவிட்டது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
அட்லீ பேசியது என்ன?
அதில் அட்லீ பேசுகையில், இன்னைக்கு நான் போட்டிருக்கும் இந்த ஃபேண்ட், சட்டை எல்லாம் என்னுடைய உழைப்பில் கிடைச்சதுனு நினைச்சாலும் என் அண்ணன், தளபதி இல்லேனா இதெல்லாம் சான்ஸே கிடையாது. நான் ராஜா ராணி பண்ணி பேமஸ் ஆனேன். ஆனால் விஜய் அண்ணன் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார். அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து என் வாழ்க்கையை மாற்றினார். ஷாருக் சாரிடம் இருந்து வாய்ப்பு வந்தது தெரிஞ்சதும், நீ என்ன பண்ணுவியோ தெரியாது, அந்த படத்தை பண்ணு உன் வாழ்க்கை மாறிடும்னு சொன்னாரு. அதே மாதிரி மாருச்சு, அதனால் விஜய் அண்ணாவுக்கு மிக்க நன்றி என கூறினார்.
Kutty story & peak elevation to CM Vijay by @Atlee_dir 🔥 pic.twitter.com/oxA4cmxgth
— Vijay Fans Trends (@VijayFansTrends) September 18, 2026
அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
இதையடுத்து சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார் அட்லீ. ஊர் வாய அடக்க முடியாது. ஆனா ஊர் வாயில் விழுந்துட்டு நாம நம்பி வாழ்ந்துட்டு போறது முட்டாள்தனம். ஊர் ஆயிரம் பேசும். நான் ஒரு குட்டி கதையா சொல்றேன். சலவைத் தொழிலாளி ஒருவர் இரண்டு ஊர் தாண்டி சென்று துணியை துவைக்க வேண்டும். அதற்காக கழுதை மீது துணியை வைத்துக் கொண்டு சென்றாராம். முதல் ஊரை தாண்டும் போது, ஏன்யா உனக்கு அறிவில்ல, இப்படி கழுதை மேல இவ்வளவு துணியை வச்சு கொண்டு போறியேனு சொன்னாங்களாம். பின்னர் அவர் அந்த மூட்டையை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டு சென்றாராம். அப்போது அடுத்த ஊர்க்காரர், அறிவு இருக்கா உனக்கு, கழுதையை வச்சுகிட்டு இப்படி அழுக்கு மூட்டையை தலையில வச்சு கொண்டு போறியேனு திட்டுனாராம்.
அதனால் எவன் என்ன சொல்றான்னு கேட்காத, நீ ஊருக்கு போணுமா போய்கிட்டே இரு, வாழ்க்கை நீ எங்க போணுமோ அங்கு அழைத்து செல்லும். யார் பேச்சையும் கேட்காத, சின்ன சின்ன பொறிகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். ஏன்னா நம்ம தான் அடுத்த தலைமுறை. இந்த சோசியல் மீடியால, அவரு, அவர சொல்றாரு, இவரு இவர சொல்றாருனு அதெல்லாம் ஒன்னும் இல்ல. சொல்லனும்னா நேரா சொல்லிக்கலாம். அடுத்த தலைமுறை அரசியலில் ஆர்வமாக இருக்க ஒரே காரணம் விஜய் அண்ணா தான். முந்தைய தலைமுறையில் சட்டசபையை நான் பார்த்ததில்லை. ஆனா இன்னைக்கு சட்டசபைல என்ன நடக்குதுன்னு 5 வயசு குழந்தை கூட பாக்குது என பேசினார். அவரின் இந்த பேச்சை கேட்ட விஜய் ரசிகர்கள், ஃபயர் விட்டு வருகிறார்கள்
Raaka: புஷ்பா ரூட்டுக்கு திரும்பும் ராக்கா.... மெகா பிளானை திடீரென மாற்றிய அட்லீ - காரணம் என்ன?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

