MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அல்லு அர்ஜுன் படத்துக்காக டைட்டிலை காப்பியடித்த அட்லீ... ராக்கா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

அல்லு அர்ஜுன் படத்துக்காக டைட்டிலை காப்பியடித்த அட்லீ... ராக்கா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்துள்ள பிரம்மாண்ட படத்திற்கு ராக்கா என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அதற்கு என்ன அர்த்தம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 08 2026, 11:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Atlee Allu Arjun Movie Titled as Raaka
Image Credit : X

Atlee Allu Arjun Movie Titled as Raaka

கோலிவுட் இயக்குனரான அட்லீ தற்போது பான் இந்தியா அளவில் பப்புலரான இயக்குநராக மாறிவிட்டார். அவர் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்ட படமொன்று தயாராகி வருகிறது. அப்படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். இந்த பிரம்மாண்ட படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இதன் பட்ஜெட் சுமார் 800 முதல் 900 கோடி ரூபாய் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டு உள்ளதோடு, அப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

26
ராக்கா என்றால் என்ன?
Image Credit : instagram

ராக்கா என்றால் என்ன?

அதன்படி இப்படத்திற்கு ராக்கா என பெயரிடப்பட்டு உள்ளது. போஸ்டரில் அல்லு அர்ஜுன் மொட்டை தலையுடன் காணப்படுகிறார். இப்படம் இந்தி, மலையாள, கன்னடம் உள்பட உலகளவில் 8 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ராக்கா என்றால் முழு நிலவு என அர்த்தமாம். தமிழில் பெளர்ணமி என்று பொருள். மருத்துவப்படி பார்த்தால் ராக்கா என்றால் ஒருவகையான தோள் நோயை குறிக்கிறது.

Related Articles

Related image1
Atlee: தீபிகா படுகோனை அட்லீ விடாமல் துரத்துவது ஏன்?! அல்லு அர்ஜுன் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது இதுதான்.!
Related image2
அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா? கூலி பட லைஃப் டைம் வசூலை விட அதிகம்
36
டைட்டிலே காப்பியா?
Image Credit : instagram

டைட்டிலே காப்பியா?

அட்லீ மீது அதிகமாக வைக்கப்படுவது அவர் காப்பியடிப்பார் என்கிற விமர்சனம் தான். அந்த சர்ச்சை இந்த படத்திலும் தொடர்கிறது. அவர் அல்லு அர்ஜுன் படத்திற்கு சூட்டியுள்ள ராக்கா என்கிற டைட்டிலும் காப்பியடிக்கப்பட்டது தான் என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. இதே பெயரில் கடந்த 1965ம் ஆண்டு இந்திப் படம் ஒன்று வந்துள்ளது. அந்த டைட்டிலை தான் அப்படியே காப்பியடித்து இயக்குநர் அட்லீ, அல்லு அர்ஜுன் படத்துக்கு சூட்டி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

46
சம்பளம் எவ்வளவு?
Image Credit : Facebook

சம்பளம் எவ்வளவு?

இந்தப் படத்துக்காக அல்லு அர்ஜுன் சுமார் 175 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, படத்தின் லாபத்தில் 15% பங்கும் அவருக்கு உண்டு. சம்பளம் மற்றும் லாபப் பங்கையும் சேர்த்தால், இந்தப் படத்தின் மூலம் அவரது வருமானம் 300 கோடி ரூபாயைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இயக்குநர் அட்லீ குமார் இந்தப் படத்தில் இரண்டாவது அதிக சம்பளம் வாங்கும் நபர். இந்தப் படத்துக்காக அவர் 100 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

56
நாயகிகள் சம்பளம்
Image Credit : Asianet News

நாயகிகள் சம்பளம்

இது அல்லு அர்ஜுனை விடக் குறைவு என்றாலும், அட்லீ தனது சம்பளத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளார். இதற்கு முந்தைய படமான 'ஜவான்' படத்துக்கு அவர் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகக் கூறப்பட்டது. அதன்படி பார்த்தால், அவரது சம்பளம் சுமார் 233% உயர்ந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்தப் படத்துக்காக தீபிகா படுகோன் சுமார் 20 முதல் 25 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், அவரது சம்பளத்திலும் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முந்தைய படமான 'சிங்கம் அகெய்ன்' படத்துக்காக அவர் 6 கோடி ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது.

66
பிரம்மாண்ட கூட்டணி
Image Credit : our own

பிரம்மாண்ட கூட்டணி

ராஷ்மிகா மந்தனா நாட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். 'புஷ்பா 2' படத்துக்காக அவர் சுமார் 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால், AA22XA6 படத்துக்காக அவரது சம்பளம் சுமார் 5-7 கோடி ரூபாய் தான் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 'புஷ்பா 2' சம்பளத்தை விடக் குறைவு. AA22XA6 படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா தவிர, மிருணாள் தாக்கூர் மற்றும் ஜான்வி கபூரும் முக்கிய வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களின் சம்பளம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பொதுவாக, மிருணாள் ஒரு படத்துக்கு 2-5 கோடி ரூபாயும், ஜான்வி 5-10 கோடி ரூபாயும் சம்பளமாக வாங்குகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ
அல்லு அர்ஜுன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நயன்தாரா கணவர்னு சொல்றதுல எனக்கு பெருமை... இயக்குநர் விக்னேஷ் சிவன் ஓபன் டாக்
Recommended image2
T.R in Vijayakanth Movie: டி.ஆரின் ராசியால் புரட்சி கலைஞர் ஆன விஜயகாந்த்..! ரஜினியால் விஜயகாந்த் நடித்து ஹிட்டான மாஸ் மூவி..!
Recommended image3
மீனாவுக்கு எதிராக சதி... துரத்தி அடிக்கப்பட்ட விஜயா; அதிர்ச்சியில் முத்து - சிறகடிக்க ஆசை அப்டேட்
Related Stories
Recommended image1
Atlee: தீபிகா படுகோனை அட்லீ விடாமல் துரத்துவது ஏன்?! அல்லு அர்ஜுன் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது இதுதான்.!
Recommended image2
அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா? கூலி பட லைஃப் டைம் வசூலை விட அதிகம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved