- Home
- Cinema
- Radha vs Ambika : சீட்டிங் பண்ணினாரா அம்பிகா? அக்கா மீது நடிகை ராதா கொடுத்த செக் மோசடி புகாரால் பரபரப்பு
Radha vs Ambika : சீட்டிங் பண்ணினாரா அம்பிகா? அக்கா மீது நடிகை ராதா கொடுத்த செக் மோசடி புகாரால் பரபரப்பு
Radha Complains Against Sister Ambika : நடிகை ராதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய அக்கா அம்பிகா மீது செக் மோசடி புகார் கொடுத்துள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

அம்பிகா vs ராதா
தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் அம்பிகா மற்றும் ராதா. சகோதரிகளான இவர்கள், அந்த காலகட்டத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர்.
நடிகை ராதா கடந்த 1981ஆம் ஆண்டு வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதேநேரம், அம்பிகா மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தனது கலைப் பயணத்தை தொடங்கியவர். பின்னர் இருவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானார்கள்.
சினிமாவில் ஜொலித்த அக்கா - தங்கை
ராதா இந்தி திரையுலகிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவைத் தொடர்ந்து அம்பிகா சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். மறுபுறம் ராதா தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அம்பிகா சமீபத்தில் அளித்திருந்த பேட்டி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருந்த நிலையில், தற்போது அவரைச் சுற்றி வெளியாகியுள்ள மற்றொரு தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அம்பிகாவின் ஆச்சரியப்படுத்தும்... பலரும் பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பு!
அம்பிகா மற்றும் சகோதரர் மீது ராதா புகார்
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கையெழுத்திடப்பட்டதாகக் கூறப்படும் 5 காசோலைகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ராதா புகாரில் தெரிவித்துள்ளார். ஒரே வீட்டில் வசித்து வந்த காலகட்டத்தில் தனது காசோலைகள் தொடர்பாக முறைகேடு நடைபெற்றிருப்பதை அறிந்த ராதா, தனது வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
46 கோடி ரூபாய் மோசடி
அப்போது தனது கணக்கில் இருந்து சுமார் ரூ.46 கோடி அளவுக்கு பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்ததாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அம்பிகா மற்றும் தனது சகோதரர் மீது ராதா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த முழுமையான தகவல்கள் விசாரணையின் முடிவிலேயே தெரியவரும். சொந்த அக்கா மீதே நடிகை ராதா போலீசில் புகார் கொடுத்துள்ளது தமிழ் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

