Ambika and Radha : தமிழ் சினிமாவில் 80களின் துவக்கத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்ற நடிகைகளும், சகோதரிகளும் தான் ராதா மற்றும் அம்பிகா. 

70களில் இறுதியில் தமிழ் சினிமாவில் கால் பதிக்க துவங்கி தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளாகவும் பணக்கார சகோதரிகளாகவும் திகழ்ந்து வருபவர்கள் தான் ராதா மற்றும் அம்பிகா சகோதரிகள். சமீபத்தில் ராதாவின் மகளும் நடிகையுமான கார்த்திகாவின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.

மணமகள் கார்த்திகா தலை முதல் கால் வரை தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பலருடைய கண்களையும் கவர்ந்தது. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். நடிகை ராதா மற்றும் அம்பிகா ஆகிய இருவருக்கும் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளது இந்நிலையில் அவர்களுடைய சகோதரர் ஒருவர் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து விளக்கியுள்ளார் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன். 

ஆளவந்தான் vs முத்து... ரீ-ரிலீஸில் மாஸ் காட்டியது யார்? ரஜினியா... கமல்ஹாசனா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

ராதா மற்றும் அம்பிகாவிற்கு மறைந்த முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவருமான எம் ஜி ஆர் பரிசாக வழங்கிய 25 ஏக்கர் நிலத்தில் ஏஆர்எஸ் கார்டன் என்கின்ற பெயரில் சகோதரிகள் இருவரும் ஒரு மிகப்பெரிய ஸ்டுடியோவை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த ஸ்டூடியோவில் பல சின்னத்திரை சீரியல் சூட்டிங் மற்றும் குறைந்த அளவிலான பட்ஜெட் படங்கள் தங்கள் படபிடிப்பை குறைந்த செலவில் நடத்தி வருகின்றனர் என்றும் பயில்வான் கூறியுள்ளார். 

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்த தயாரிப்பாளர் பிரசாத் என்பவர் அர்ஜுனன் என்பவருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாகவும். அதில் தற்பொழுது வரை வெறும் 19 லட்சம் மட்டுமே மீதம் வந்திருக்கிறது என்றும் 6 லட்சம் ரூபாய் கடன் பாக்கி இருக்கிறது என்றும் பயில்வான் கூறியுள்ளார். 

இதில் அர்ஜுனன் என்பவர் தான் ராதா மற்றும் அம்பிகாவின் சகோதரர் ஆவார். இந்நிலையில் இந்த கடன் பிரச்சனை தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தயாரிப்பாளர் பிரசாத் பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகிய நிலையில் தற்பொழுது ARS கார்டனில் படபிடிப்புகள் நடத்த தற்காலிகமான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

Ra.Sankaran Death: அதிர்ச்சி.!! பழம்பெரும் இயக்குனர் மற்றும் நடிகர் ரா.சங்கரன் காலமானார்!

இதனால் அங்கு படபிடிப்பு நடத்தப்பட்டு வந்த சீரியல்களும், சின்ன பட்ஜெட் படங்களும் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாமல் சிக்கி தவித்து வருவதாகவும், அவர் கூறியுள்ளார். பணக்கார சகோதரியிடம் கோடிக்கணக்கான ரூபாய்கள் பணம் இருக்கும் பொழுது தம்பிக்கு உதவாதது ஏன்? என்றும். வெகு சில லட்சங்கள் மட்டுமே பிரச்சனையாக உள்ள நிலையில் அதனால் சுமார் 400 கோடி மதிப்பிலான சொத்து சிக்கலில் உள்ளதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.