ரக்சன் - ராஜலட்சுமியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 3 முக்கிய பிரபலங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்..!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாக துவங்கி உள்ளது. அந்த வகையில் தற்போது இரண்டு நடிகர்கள் மற்றும் மாடல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை ரசிக்க ஒரு கூட்டம் உள்ளது என்றால், கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் செய்திகள்: ச்சீ... ச்சீ... கவர்ச்சி என்ற பெயரில் கயிற்றால் ஆன உள்ளாடையில் போஸ் கொடுத்த உர்ஃபி ஜாவத்!!
வெற்றிகரமாக தமிழில் 5 சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, விரைவில் சீசன் 6 ஆரம்பமாக உள்ளது, இந்நிலையில் இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் விவரங்கள் அவ்வப்போது வெளியாக துவங்கியுள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரக்சன் மற்றும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.
மேலும் செய்திகள்: அமீரை கட்டி அணைத்து... எமோஷனல் பதிவுடன் காதலை உறுதி செய்த பாவனி!
இவர்களை தொடர்ந்து இந்த பட்டியலில் தற்போது இரண்டு நடிகர்கள் மற்றும் ஒரு மாடல் என மூன்று முக்கிய பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகிறது.
பிரபல ஸ்டண்ட் அப் காமெடியனும், அலைபாயுதே, யாரடி நீ மோகினி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகருமான கார்த்தி குமார் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: 18 கோடிக்கு.. 14 டாப் மாடல் லக்ஸூரியஸ் கார்களை வாங்கி வைத்துள்ள தளபதி விஜய்! முழு விவரம் இதோ...
அதே போல் பிப்ரவரி 14 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, பின்னர்... அஞ்சாதே, கோ, நெற்றிக்கண் என பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் மிரட்டியுள்ள அஜ்மல் தற்போது வரை தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் நிலையில்... பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு விளம்பரங்களில் நடித்து வரும் அஜய் மெல்வின் என்பவர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்த கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கோல்கேட் மற்றும் ஈனோ ஆகிய விளம்பரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் என்பது குறிபிடித்தக்கது.