அமீரை கட்டி அணைத்து... எமோஷனல் பதிவுடன் காதலை உறுதி செய்த பாவனி!
பிக்பாஸ் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்த, அமீருக்கும், பாவனிக்கும் ஏற்கனவே காதல் தீ பற்றி கொண்டு எரிவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எமோஷன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி போன்ற சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாவினி.
இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான பிரதீப் குமார் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், 3 மாதத்தில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் செய்திகள்: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை வெளியிட்ட ரஜினிகாந்த்..!!
இதில் இருந்து மீண்டு, மீண்டும் சின்னத்திரை சீரியல்களில் பிஸியான பாவினி... பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அமீர் பாவினியுடன் அதிக நெருக்கம் காட்டினார்.
அப்போது காதல் இல்லை என இருவரும் மறுத்தாலும், பின்னர் இருவரும் சேர்ந்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களுடைய நடன திறமையை வெளிப்படுத்தி வந்தனர்.
மேலும் செய்திகள்: லலித் மோடியுடன் டேட்டிங்.. விரைவில் திருமணமா? ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு உண்மையை போட்டுடைத்த சுஷ்மிதா சென்
இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் நெருக்கமாக பழகிய இவர்கள் காதலித்து வருவதாக, ஏற்கனவே சில தகவல்கள் வெளியான நிலையில், இதனை உறுதி படுத்தும் விதமாக பாவினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீரின் பிறந்தநாளுக்கு நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இந்த பதிவில் இவர் தெரிவித்துள்ளதாவது,பிறருக்கு நன்மையை மட்டுமே செய்ய விரும்பும், உங்களைப் போன்ற ஒருவர் கிடைத்திருப்பது உண்மையிலேயே என்னுடைய பாக்கியம். நான் உங்களிடமிருந்து பெறும் அன்பும், அக்கறையும், நீங்களும் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும், என்னுடைய நல்லது, கெட்டது, என அனைத்தையும் நேசித்ததற்கு நன்றி. தங்கம் போன்ற இதயம் கொண்ட ஒரு மனிதன் நீ. உனக்கு நான் பல விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். லவ் யூ உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: 18 கோடிக்கு.. 14 டாப் மாடல் லக்ஸூரியஸ் கார்களை வாங்கி வைத்துள்ள தளபதி விஜய்! முழு விவரம் இதோ...