MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 18 கோடிக்கு.. 14 டாப் மாடல் லக்ஸூரியஸ் கார்களை வாங்கி வைத்துள்ள தளபதி விஜய்! முழு விவரம் இதோ...

18 கோடிக்கு.. 14 டாப் மாடல் லக்ஸூரியஸ் கார்களை வாங்கி வைத்துள்ள தளபதி விஜய்! முழு விவரம் இதோ...

தளபதி விஜய் ஒரு கார் பிரியர். தனக்கு பிடித்த கார்கள் மார்க்கெட்டில் வந்துவிட்டால் அதனை முடிந்தவரை விரைவாக வாங்கி கெத்து காட்டுவார். அந்த வகையில் இவரிடம், வின்டேஜ், பிஎம்டபுள்யூ, மினிகூப்பர், டொயோட்டா இன்னோவா, ஆடி ஏ8 போன்ற 14 டாப் மாடல் சொகுசு கார்கள் உள்ளது அவற்றின் விவரம் இதோ... 

3 Min read
manimegalai a
Published : Jul 15 2022, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
116

தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். சராசரியாக ஒரு படத்திற்கு இவர் சம்பளமாக குறைந்த பட்சம் ரூ.50 கோடி முதல் அதிக பட்சம் ரூ.70 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் 2022 இல் அவரது சொத்து மதிப்பு ரூ 410 கோடிக்கு மேல் என்று சில தகவல்கள் வெளியாகின.

கார்கள் வாங்குவதில் அலாதி பிரியம் கொண்ட இவர் சுமார் 14 டாப் மாடல் சொகுசு கார்களை வைத்துள்ளார். அவற்றின் விலை மற்றும் இதர விவரங்களை பார்ப்போம்...

216

Rolls Royce Ghost:

பல பிரபலங்கள் வாங்க நினைக்கும் அதிக விலை கொண்ட கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் ஒன்று. இந்த காரின் விலை ரூ.8 கோடி ஆகும்.

316


 Audi A8 L

தற்போது பல பிரபலங்கள் இந்த காரை வைத்துள்ள நிலையில், ஆடி A8 L மாடல் அறிமுகமான போதே.. விஜய் இந்த காரை வாங்கிவிட்டார். இதன் விலை ரூ.1.58 கோடி ஆகும்.

மேலும் செய்திகள்: இறப்பதற்கு முன்பே மரணம் குறித்தும்... வாழ்க்கையின் தத்துவத்தையும் முகநூல் பதிவில் கூறிய பிரதாப் போத்தன்!
 

416


BMW 7-Series

விஜய் சென்னை பகுதிகளில் அதிகம் வலம் வருவது இந்த காரில் தான். இது அவருடைய ஃபேவரட் கார் என்றும் சொல்லலாம். இதன் விலை ரூ.1.30 கோடி.

516

BMW X6

ஏற்கனவே BMW கார் வைத்திருந்தாலும், தன்னுடைய கார் மோகத்தால்... BMW X6 மாடலையும் அசராமல் வாங்கி வைத்துள்ளார். இதன் விலை ரூ: 96.90 லட்சமாகும்.

616

Mercedes Benz GLA

ரூ. 87.9 லட்சம் மதிப்பு கொண்ட இந்த கார் பார்ப்பதற்கே... ஒரு பிரமாண்ட தோற்றத்தை கொடுக்க கூடியது. ஒரு வேலை இதன் தோற்றத்தில் கவரப்பட்டு தான் இந்த காரை வாங்கி இருப்பாரோ தளபதி.

மேலும் செய்திகள்: 15 வயதில் தந்தையை இழந்த பிரதாப் போத்தன்... சினிமாவிற்குள் வந்தது எப்படி?
 

716

Land Rover Range Rover Evoque

பார்ப்பதற்கே செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் இந்த காரை பல பிரபலங்கள் உபயோகித்து வருகிறார்கள் அதில் தளபதி விஜய்யும் ஒருவர்... இந்த காரின் விலை 65 லட்சம் ஆகும்.

816

Ford Mustang:

ஸ்போர்ட்ஸ் கார்களை போல் தோற்றமளிக்கும் ஸ்டைலிஷான இந்த கார்... தளபதியின் ஃபேவரட் என கூறலாம். இந்த காரின் விலை ரூ.74 லட்சம் ஆகும்.

916
The new BMW 5 Series

The new BMW 5 Series

BMW 5-Series

கார் பிரியர்களை பொறுத்தமட்டில்... ஒரு பிராண்ட் பிடித்து விட்டது என்றால் அந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் கார்கள் அனைத்தையும் வாங்கி விடுவது அவர்களுக்கு ஃபேஷன் ஆகிவிடும். அப்படி தான் தளபதி விஜய்  BMW அறிமுகப்படுத்தும் சொகுசு கார்களை வாங்கி அடுக்கியுள்ளார். இவர் வைத்திருக்கும்  BMW 5-Series காரின் விலை ரூ. 60 லட்சம்.

மேலும் செய்திகள்: 'சந்திரமுகி 2' படத்தில் நடிப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!
 

1016

Volvo XC90

பார்க்கவும் சரி... ஓட்டி செல்லவும் சரி... மிகவும் ட்ரெண்டியாகவும் ஸ்மூத்தாகவும் இருக்கும் Volvo கார், விஜய்யின் டாப் கலெக்ஷன் கார்களில் ஒன்றாக உள்ளது. இந்த காரின் விலை ரூ.87.9  லட்சம் ஆகும்.

1116

Mercedes Benz E350D

எத்தனை சொகுசு கார்கள் வந்தாலும், பென்ஸ் காருக்கு இருக்கும் மதிப்பே தனி தான். அந்த வகையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Mercedes Benz E350D காரை வைத்துள்ளார் தளபதி. இதன் விலை ரூ.57.14 லட்சம் ஆகும்.

1216


BMW 3 Series
 
BMW சீரிஸ் கார்களில் பார்க்க கொஞ்சம் ட்ரெண்டியாக இருக்கும் BMW 3 சீரிஸ் காரையும் விட்டு வைக்காமல் வாங்கி வைத்துள்ளார் தளபதி. இந்த காரின் விலை ரூ.50.7 ஆகும்.

மேலும் செய்திகள்: 'கார்கி' படத்தில் சாய்பல்லவிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான்..!
 

1316

BMW 3 Series
 
BMW சீரிஸ் கார்களில் பார்க்க கொஞ்சம் ட்ரெண்டியாக இருக்கும் BMW 3 சீரிஸ் காரையும் விட்டு வைக்காமல் வாங்கி வைத்துள்ளார் தளபதி. இந்த காரின் விலை ரூ.50.7 ஆகும்.

1416

Mini Cooper S

சமீப காலமாக பலர் வாங்க நினைக்கும் கார்களில் ஒன்று Mini Cooper. பார்ப்பதற்கு குட்டையாகவும், கியூட்தாகவும், ஸ்மூத்தாக செல்லக்கூடியது. இதன் விலை  35.47 ஆகும்.

1516

Toyota Innova Crysta:

தன்னிடம் பல கோடி ரூபாயில் சொகுசு கார்கள் இருந்தும்... விஜய் சென்னை பகுதிகளில் அதிகம் வெளியே வரும் போது, இந்த காரை தான் பயன்படுத்துவார். இந்த காரின் விலை ரூ.23.3 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்: IMDB தர வரிசை பட்டியலில் முதல் இடத்தை தட்டி தூக்கிய 'விக்ரம்'... டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட் இதோ..!
 

1616


Maruti Suzuki Celerio

தளபதி விஜய்யிடம் உள்ள விலை குறைவான சொகு கார் என்றால் அது Maruti Suzuki Celerio கார் தான். இதன் விலை ரூ. 5.9 லட்சம் ஆகும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved