IMDB தர வரிசை பட்டியலில் முதல் இடத்தை தட்டி தூக்கிய 'விக்ரம்'... டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட் இதோ..!
2022 ஆம் ஆண்டில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகம்விரும்பப்பட்ட, இந்தியத் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை IMDb தற்போது வெளியிட்டுள்ளது.
விக்ரம்:
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து தயாரித்திருந்த விக்ரம் திரைப்படம் கடந்த மாதம் 3 ஆம் தேதி வெளியாகி... இதுவரை 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ள இப்படம் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பட்டியலில் முதல் இடத்தை தட்டி தூக்கியுள்ளது.
இதன் IMDb மதிப்பீடு: 8.8/10
KGF சேப்டர் 2
நடிகர் யாஷ் நடிப்பில், கேஜிஎஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான கேஜிஎஃப் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஏப்ரல் மாதம் வெளியான இந்த திரைப்படம் IMDb தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
IMDb மதிப்பீடு: 8.5/10
தி காஷ்மீர் பைல்ஸ்:
இயக்குனர் விவேக் அக்னிகோத்திரி இயக்கத்தில், கடந்த மார்ச் மாதம் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம், காஷ்மீர் தீவிரவாத இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டு, காஷ்மீரிலிருந்து இந்து பண்டிதர் குடும்பங்கள் வெளியேறியதை எடுத்து கூறிய திரைப்படம்.
இதன் IMDb மதிப்பீடு: 8.3/ 10
ஹிருதயம்:
மலையாளத்தில் வெளியான மென்மையான காதல் திரைப்படம் ஹிருதயம். வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கிய இந்த படத்தில் . பிரணவ் மோகன்லால் நாயகனாகவும், கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாகவும் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற காதல் படமாகும்.
இதன் IMDb மதிப்பீடு: 8.1/10
RRR
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் - ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தேச பற்று கொண்ட RRR திரைப்படம் 5 ஆவது இடத்தில் உள்ளது.
இதன் IMDb மதிப்பீடு : 8/10
A Thursday:
16 குழந்தைகளை கடத்தி செல்லும் ஒரு பிலே ஸ்கூல் டீச்சர் கோரிக்கை ஒன்றை வைக்க, அது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. பரபரப்பு... விறுவிறுப்பு குறையாமல் ஒரு திரில்லர் படமாக இப்படம் எடுக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதன் IMDb மதிப்பீடு: 7.8/10
Jhund:
ஓய்வுபெற்ற விளையாட்டு ஆசிரியரான விஜய் பார்சேயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களில் இருந்து ஸ்லம் குழந்தைகளை காப்பாற்ற, அவர்களுக்கு கால்பந்து கற்றுக்கொடுத்து ஒரு அணியை உருவாக்குகிறார். பின்னர் அவர்கள் தேசிய போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு திறமையாக விளையாடி அவருக்கு பெருமை சேர்ப்பதை தரூபமாக காட்டிய திரைப்படம்.
இதன் IMDb மதிப்பீடு: 7.4/10
சாம்ராட் பிருத்விராஜ்:
துளியும் பயம் அற்ற போர்வீரரான சாம்ராட் பிருத்விராஜ் பற்றிய வரலாற்று திரைப்படம். கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியது.
இதன் IMDb மதிப்பீடு: 7.2/10
Runway 34
உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். சிறந்த விமானியான கேப்டன் விக்ராந்த் கன்னாவை மையமாகக் வைத்து அவரது விமானம் ஒரு சர்வதேச இடத்திலிருந்து புறப்பட்ட பிறகு இயற்கை பேரழிவை எதிர்கொள்கிறது. பின் என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்போடு கூறிய படம். நல்ல விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிசில் சுமாரான வெற்றியை கண்டது.
இதன் IMDb மதிப்பீடு: 7.2/10
கங்குபாய் கதவாடி:
கங்குபாய் கத்தியவாடி, இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றி, கணவனே விபச்சார விடுதியில் ஏமாற்றி விற்பனை செய்யும் கதை. அதில் இருந்து மீண்டும் எப்படி தனக்கான உரிமை மற்றும் அதிகாரத்தை கங்குபாய் பெறுகிறார் என்பதே மீதிக்கதை.
IMDb மதிப்பீடு: 7/10