லலித் மோடியுடன் டேட்டிங்.. விரைவில் திருமணமா? ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு உண்மையை போட்டுடைத்த சுஷ்மிதா சென்
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி (Lalit Modi), சுஷ்மிதா சென்னுடன் (Sushmita Sen) எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு, இருவரும் டேட் செய்வதாக கூறியது சமூக வலைத்தளத்தையே பரபரப்பாகிய நிலையில், இந்த விவகாரம் குறித்து தற்போது மௌனம் கலைத்துள்ளார் சுஷ்மிதா சென்.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு, இருவரும் டேட் செய்வதாக கூறியது சமூக வலைத்தளத்தையே பரபரப்பாகிய நிலையில், இந்த விவகாரம் குறித்து தற்போது மௌனம் கலைத்துள்ளார் சுஷ்மிதா சென்.
நேற்று மாலை, லலித் மோடி சுஷ்மிதா சென்னுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார். அதில் சுஷ்மிதா சென் தன்னுடைய பெட்டர்ஹாப் என்றும், இறுதியாக புதிய வாழ்க்கையை துவங்க உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் டேட்டிங் செய்கிறோம். ஆனால் விரைவில் அதுவும் ஒரு நாள் நடக்கும் என்று லலித் மோடி அந்த பதிவில் கூறியிருந்தார்.
மேலும் செய்திகள்: 18 கோடிக்கு.. 14 டாப் மாடல் லக்ஸூரியஸ் கார்களை வாங்கி வைத்துள்ள தளபதி விஜய்! முழு விவரம் இதோ...
இப்பதிவை அவர் வெளியிட்ட சில மணி நேரத்தில், இந்த செய்து காட்டு தீ போல் பரவியது. இருவரின் புகைப்படங்களை பார்த்த, நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்களா? என்பது போன்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்ததோடு... உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினர்.லலித் மோடி, இப்படி ஒரு பதிவை வெளியிட்டபோதிலும், சுஷ்மிதா சென் தொடர்ந்து மௌனம் காத்து வந்தார். இந்நிலையில் ஒருவழியாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், லலித் மோடியின் பதிவுக்கு ஒற்றை புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, தன்னுடைய பதிலையும் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: 18 கோடிக்கு.. 14 டாப் மாடல் லக்ஸூரியஸ் கார்களை வாங்கி வைத்துள்ள தளபதி விஜய்! முழு விவரம் இதோ...
தன்னுடைய இரு மகள்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பகிர்ந்து," இது தான் எனக்கு மகிழ்ச்சியளிக்கும் இடம். திருமணம் இல்லை... மோதிரம் இல்லை... ஆனால் நிபந்தனையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன். போதுமான விளக்கம் கொடுத்துள்ளேன். இனி வழக்கமான வேலை மற்றும் பணிக்கு திரும்புகிறேன். எப்போதும் என் மகிழ்ச்சியில் பங்கு கொண்டதற்கு நன்றி என தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவு தற்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலாக அமைந்துள்ளது.
மேலும் செய்திகள்: இறப்பதற்கு முன்பே மரணம் குறித்தும்... வாழ்க்கையின் தத்துவத்தையும் முகநூல் பதிவில் கூறிய பிரதாப் போத்தன்!