ஸ்ரீதேவி முதல் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் வரை... பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டு அழகான 15 ஹீரோயின்கள்!
இயற்கையிலேயே அழகாக பிறந்திருந்தாலும், அழகை மேலும் மெருகேற்றிக்கொள்ள நடிகைகள் சிலர் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அப்படி பேரழகியாக மாறி ரசிகர்களை கவர்ந்த 15 நடிகைகள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தனதாக்கிக்கொண்ட ஸ்ரீதேவி, தன்னுடைய அழகை மெருகேற்றுவதற்காக மூக்கு மட்டும் உதடுகளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.
உலக அழகியான நடிகை ஐஸ்வர்யா ராய், திரையுலகில் நடிக்க துவங்கிய பின்னர்... உதடுகள், முக அமைப்பு மற்றும் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சிறு மாற்றங்கள் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
உலகநாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், மூக்கு மற்றும் உதடு ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளை கடந்து... தற்போது ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் சமந்தா... தன்னுடைய கண்ணம், மூக்கு, மற்றும் உதடுகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.
சமந்தா, நயன்தாரா முதல் ராஷ்மிகா மந்தனா வரை! 10 நடிகைகளின் லேட்டஸ்ட் டாட்டோஸ்!
நயன்தாரா, முக அழகிற்காக எந்த ஒரு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை என்றாலும், உடல் எடையை குறைக்க மற்றும் எடை அதிகரிக்க லிபோசக்ஷன் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மற்றபடி தன்னுடைய சரும அழகை பராமரிக்க, ஆயுர்வேத முறையை அதிகம் பின்பற்றிவருகிறார்.
நயன்தாரா போலவே அனுஷ்காவும், தன்னுடைய முக அழகிற்காக எந்த ஒரு பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டது இல்லை. ஆனால் 'ஜீரோ சைஸ்' படத்திற்காக ஏற்றிய எடையை குறைக்க முடியாமல், லிபோ ஃபேட் எனப்படும் கொழுப்புகளை உறிஞ்சும் அறுவை சிகிச்சை மூலம் தனது உடலுனை மேம்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது.
refuse promote brands
நடிகை கங்கனா ரணாவத், மூன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய மார்பகங்களை எடுப்பாகக காட்டிக்கொள்ளவும், மூக்கு மற்றும் கண்ணங்களை சரி செய்யவும் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா... தன்னுடைய உதடுகளை பெரிதாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.
தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த, ப்ரியங்கா சோப்ரா... தற்போது ஹாலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் நிலையில், இவர் தன்னுடைய அழகை மெருகேற்ற, உதடு மற்றும் மூக்கு ஆகிய இடங்களில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல ஹிட் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், தன்னுடைய மூக்கின் அழகை மேம்படுத்தி கொள்வதற்காக, அமெரிக்காவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.
priya mani
நம்ப பருத்தி வீரன் முத்தழகு... தன்னுடைய உதடு மற்றும் கன்னங்களின் அழகை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரிசெய்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரியா மணி என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, தன்னுடைய மூக்கினை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்துள்ளதாக பல முறை வெளிப்படையாகவே தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் உயிரே படத்தின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா... மார்பகங்கள் பெரிதாக்க அறுவை சிகிச்சையும், கண்ணங்களை சரி செய்துகொள்வதாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தொடை அழகி என கொண்டாடப்படும், ரம்பா... தன்னுடைய மூக்கு மற்றும் உதடுகளை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்து கொண்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார். இவர் தன்னுடைய உதடை சரி செய்து கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.