தளபதி பிறந்தநாளில் காத்திருக்கும் விருந்து! 'லியோ' படத்தில் இருந்து வெளியாகும் 'நா ரெடி...' முதல் சிங்கிள்!

தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று, 'லியோ' படத்தில் இடம்பெற்றுள்ள 'நா ரெடி' என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக தளபதி விஜய்யே சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

leo first single naa ready to be released on vijays birthday

தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று, 'லியோ' படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகின் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் 49-ஆவது பிறந்த நாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ரசிகர்களுக்கு தரமான விருந்து கொடுக்கும் விதமாக தளபதி விஜய் தன்னுடைய சமூக வலைதளத்தில், போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

leo first single naa ready to be released on vijays birthday

அதாவது விஜய்யின் பிறந்தநாள் அன்று, அவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'நான் ரெடி' என்ற பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தகவலை தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.

ஏற்கனவே தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்த நிலையில்... அப்படம் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் உடன் தளபதி விஜய் கைகோர்த்துள்ளதால், 'லியோ' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏக்கச்சக்கமாக எகிறி உள்ளது.

leo first single naa ready to be released on vijays birthday

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்துள்ளார். விஜய்யின் தந்தையாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வில்லனாக கௌதம் மேனன், மன்சூர் அலி கான், மிஷ்கின், ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த், கதிர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இப்படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு  திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின், பிறந்த நாளை முன்னிட்டு 'நான் ரெடி' என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ள தகவல், ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் வரும் 22 ஆம் தேதி, தளபதி விஜய் தன்னுடைய 68 ஆவது படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் டைட்டில் அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios