மாலத்தீவில் ஆண் நண்பர்களுடன்... கவர்ச்சி உடையில் அட்டகாசம் பண்ணும் குட்டி நயன் அனிகா! வைரலாகும் புகைப்படம்!
நடிகை அனிகா சுரேந்திரன் தற்போது ஹீரோயினாக மாறிவிட்ட நிலையில்... தன்னுடைய ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளோடு மாலத்தீவில் அட்டகாசம் செய்யும் புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் , பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான, 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் ரீல் மகளாக நடித்து, முதல் படத்திலேயே தன்னுடைய அட்டகாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் அனிகா .
அனிகாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படத்தை தொடந்து... நானும் ரெளடி தான், படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்திலும், மிருதன் படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடித்திருந்தார்.
ஆத்தாடி... டாட்டூ குத்துற இடமா அது? ஓப்பனாக காட்டி ரசிகர்களை மனதை ரணகளமாக்கிய அனுபமா பரமேஸ்வரன்!
அதே போல் மீண்டும், அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக 'விஸ்வாசம்', படத்தில் நடித்த அனிகா, கெளதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரிலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' போன்ற தரமான படங்களில் நடித்து வந்த அனிகா, 18 வயதை எட்டியதும் ஹீரோயின் மெட்டீரியலாக மாறிவிட்டார்.
தன்னை தேடி வந்த குழந்தை தனமான கதாபாத்திரங்களை தவிர்த்து விட்டு, நடித்தால் இனி ஹீரோயின் மட்டும் தான் என அடம்பிடித்த நிலையில், தெலுங்கில் 'புட்ட பொம்மா' படத்தில் அழகு தேவதையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து, மலையாளத்தில் வெளியான 'ஓ மை டார்லிங்' படத்தில், லிப் லாக் காட்சியில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
அதே போல் இனி கவர்ச்சி காட்டவும் தயார் என்பதை தெரிவிக்கும் விதமான, கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி வரும் இவர் தற்போது... மாலத்தீவுக்கு தன்னுடைய தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி உடையில்... எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.