இளம் நடிகருடன் ரகசிய தொடர்பில் இருக்கும் விஜய் யேசுதாஸ் மனைவி? காரணம் தனுஷா... பகீர் கிளப்பும் பயில்வான்!
60 சவரன் நகைகள் தொலைந்து விட்டதாக விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா நாடகம் ஆடுகிறாரா? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததாக அண்மையில் ஒரு தகவல் வெளியானதை தொடர்ந்து, தர்ஷனாவின் ரகசிய தொடர்பு குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
பிரபல முன்னணி பாடகர் யேசுதாஸின், மகன் விஜய் யேசுதாஸ் தமிழ் சினிமாவில் நடிகராகவும், பின்னணி பாடகராகவும், ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இவருடைய சொந்த ஊர் கேரளா என்றாலும், தன்னுடைய பிள்ளைகளின் படிப்பிற்காக மனைவியுடன் சென்னை அபிராமிபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் யேசுதாஸின் வீட்டில் இருந்து சுமார் 60 சவரன் தங்க நகைகள் திருடு போய்விட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரில், கடந்த டிசம்பர் மாதமே தன்னுடைய நகைகள் திருடு போய்விட்டதாகவும், ஆனால் இது குறித்து பிப்ரவரி மாதம் லாக்கரை செக் செய்த போது தான் தெரிய வந்ததாக புகார் மனுவில் தெரிவித்திருந்தார் தர்ஷனா.
மேலும் தன்னுடைய லாக்கர் டிஜிட்டல் முறையில் செயல்படும் என்றும், அதன் ரகசிய குறியீடு இருந்தால் மட்டுமே நகைகளை திருட முடியும் என தெரிவித்தார். இந்த ரகசிய குறியீடு எண் தர்ஷனா மற்றும் விஜய் யேசுதாஸ் ஆகியோருக்கு மட்டுமே தெரிந்திருந்த நிலையில், இவர்களைத் தாண்டி யார் திருட வாய்ப்புள்ளது என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலை செய்த 11 பேரிடமும் போலீசார் விசாரணை செய்தது மட்டுமின்றி, அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்பவர்களிடமும் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தர்ஷனா மற்றும் விஜய் யேசுதாஸ் இருவருக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ள தகவல் தெரியவந்தது. இதன் காரணமாக, பல மாதங்களாக விஜய் யேசுதாஸ் - தர்ஷனாவை பார்க்க, வீட்டிற்கு வராத நிலையில் அவர் எடுத்திருக்கவும் வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
டி.ராஜேந்தர் செய்த செயல்... 8 கோடி நஷ்டஈடு வழங்கிய தமிழக அரசு! ஏன் தெரியுமா?
எனவே தர்ஷனாவே அந்த நகைகளை ஏதேனும் செய்துவிட்டு, நாடகமாடுகிறாரா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததாகவும், அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இதை தொடர்ந்து பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான, பயில்வான் ரங்கநாதன் யாரும் எதிர்பார்க்காத விதமாக மற்றொரு குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், விஐபி (வேலையில்லா பட்டதாரி) படத்தில் வில்லனாக நடித்த இளம் நடிகர் அமிர்தாஸ் பிரதான், என்பவருடன் விஜய் யேசுதாஸின் மனைவி ரகசிய தொடர்பில் இருந்து வருவதாகவும், இதற்கு காரணம் தனுஷ் தான் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை இதுதான் விஜய யேசுதாசுக்கும் அவருடைய மனைவி தர்ஷனாவும் விவாகரத்து வரை செல்ல காரணமா? என அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.