18 வயதில் காதல்! அந்த விஷயத்துக்கு ஓகே.. பட் இந்த இரண்டும் வேண்டாம்! காதலருக்கு கண்டீஷன் போட்ட பிரியா பவானி!
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவி, வெற்றிகரமாக முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ள பிரியா பவானி ஷங்கர், தன்னுடைய காதலருக்கு போட்ட கண்டீஷன் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
விஜய் டிவி தொலைக்காட்சி, சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள்
அடுத்தடுத்து வெள்ளித்திரை வாய்ப்பை எட்டிப் பிடித்து விடுகிறார்கள். இதன் காரணமாகவே விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கவும், ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் கலந்து கொள்ளவும் பலர் ஆவர்வம் காட்டுகிறார்கள்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும், சீரியல் நடிகர்களாகவும், பிக்பாஸ் , சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் அறியப்பட்ட பலர் இன்று வெளி திரை பிரபலங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், குக் வித் கோமாளி அஸ்வின், சிவாங்கி, பாலா, தொகுப்பாளர் மாகாபா, ரக்ஷன், திவ்ய தர்ஷினி, என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
ஒன்ஸ் மோர்... கமல்ஹாசன் படத்தில் இணையும் மாஸ் நடிகர்? சுட சுட வெளியான தகவல்!
அந்த வகையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து விட்டு, பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தவர் பிரியா பவானி ஷங்கர். இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் இவரை தேடி வந்தது.
'மேயாத மான்' படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தார் பிரியா பவானி ஷங்கர். இந்த படத்தை இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய நிலையில், கார்த்தி சுப்புராஜ் தயாரித்திருந்தார். எதார்த்தமான காதல் கதையை, சென்டிமென்ட்டோடு இணைத்து, காமெடியாக படமாக்கிய விதம் ரசிகர்களை கவர்ந்தது. பிரியா பவானியின் நடிப்பும், அழகும் ரசிகர்களை ஈர்த்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வரிசை கட்டி நின்றது.
55 வயது தமிழ் நடிகையுடன் காதலா? முதல் முறையாக மௌனம் கலைத்த தெலுங்கு பிரபாஸ் ஸ்ரீனு!
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர், மாஃபியா, யானை, அகிலன், பத்து தல, ருத்ரன், கடைக்குட்டி சிங்கம், போன்ற படங்கள் முதலுக்கு மோசம் இல்லாமல் வரவேற்பை பெற்றது. தற்போது இந்தியன் 2 உள்ளிட்ட, சுமார் அரை டஜன் படங்கள் இவரின் கைவசம் உள்ளது.
இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் 'மான்ஸ்டர்' படத்தை தொடர்ந்து, மீண்டும் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள 'பொம்மை' படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் சிறிய வயதில் பொம்மை எல்லாம் வைத்து விளையாடிய ஞாபகம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
குழந்தை பிறந்த குஷியில் கோயில்... கோயிலாக சுற்றும் பிரபு தேவா! இப்போ எங்க போயிருக்காரு தெரியுமா?
இந்த கேள்விக்கு பதிலளித்த, பிரியா பவானி ஷங்கர் சின்ன வயதில் நான் பொம்மை எல்லாம் வைத்து விளையாடியது கிடையாது. மேலும் 18 வயதிலேயே நான் காதலிக்க துவங்கி விட்டேன். என் பாய் ஃப்ரெண்ட் கிட்டயும் டெடி பியர் மாதிரி ஏதாவது பொம்மை வாங்கிட்டு வந்து காச வேஸ்ட் பண்ணாத என்றும் அதேபோல் பூ ஏதாவது வாங்கிக் கொடுத்தால் அது நீ எடுத்து வருவதற்குள் வாடி விடும் எனவே இந்த இரண்டு விஷயங்களை மட்டும் செய்யாதே என கூறுவேன்.
ஆனால் அதற்கு பதிலாக ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்தால் மட்டும் போதும் என்பேன்... என்று கூறியுள்ளார். பிரியா பவானி ஷங்கரின் இந்த வித்யாசமான கடீஷனை கேள்வி பட்டு ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள். காதல் விஷயத்துல கூட நீங்க வித்தியாசம் தான்! கொடுத்து வச்சவர் அவர்!!