விரைவில் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகும் கணேஷ் வெங்கட்ராம்! கர்ப்பமாக இருக்கும் நிஷாவின் புகைப்படம் வைரல்!
பிக்பாஸ் பிரபலமான கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை, தற்போது தன்னுடைய பேபி பம்ப் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து நிஷாவுக்கு ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கணேஷ் வெங்கட்ராமின் மனைவியும், நடிகையுமான நிஷா, 'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து 'முத்தாரம்', 'ஆபிஸ்', 'தெய்வமகள்', 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட பல சீரியல்களை நடித்து பிரபலமானார்.
சின்னத்திரையில் 10-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள நிஷா, வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'இவன் வேற மாதிரி' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, பின்னர் 'நான் சிகப்பு மனிதன்', 'என்ன சத்தம் இந்த நேரம்', 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது', 'வில் அம்பு' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
அதே போல் சன் சிங்கர், சூரிய வணக்கம், வணக்கம் தமிழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, பிரபல மாடலும், நடிகருமான கணேஷ் வேங்கடராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணேஷ் வெங்கடராமன் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஏனோ இவரால் இதுவரை தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை பிடிக்கமுடியவில்லை.
குழந்தை பிறந்த குஷியில் கோயில்... கோயிலாக சுற்றும் பிரபு தேவா! இப்போ எங்க போயிருக்காரு தெரியுமா?
பட வாய்ப்புக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர், எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் மிகவும் நிதானமாக விளையாடினார். ஆனால் இவரின் விளையாட்டில் சுவாரஸ்யம் இல்லாத காரணத்தால், இவரின் வெற்றி வாய்ப்பு நழுவியது. எனினும் ஃபைனல் வரை சென்ற கணேஷ் வெங்கட் ராம் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னரும், இவருக்கு படங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர், தமிழில் நடித்திருந்த வாரிசு திரைப்படம் தமிழில் வெளியான நிலையில், தற்போது 'உன் பார்வையில்', 'வணங்காமுடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஷர்ட்டை கழட்டி... உள்ளாடையோடு கவர்ச்சி விருந்து வைத்த தமன்னா! வேற லெவல் போட்டோ ஷூட்..!
நிஷா - கணேஷ் வெங்கட்ராம் தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னுடைய பேபி பம்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.