குழந்தை பிறந்த குஷியில் கோயில்... கோயிலாக சுற்றும் பிரபு தேவா! இப்போ எங்க போயிருக்காரு தெரியுமா?
நடிகரும், நடன இயக்குனருமான, பிரபுதேவா 50 வயதில் நான்காவது முறையாக பெண் குழந்தைக்கு அப்பாவான சந்தோஷத்தை கொண்டாடி வரும் நிலையில், தற்போது கோயில் கோயிலாக சென்று கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
கோலிவுட் திரை உலகின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா. இவரின் தந்தை முகுர் சுந்தர், ஒரு நடன இயக்குனர் என்பதால்.... தன்னுடைய அப்பாவை தொடர்ந்து பிரபுதேவாவும் நடன இயக்குனராக மாறினார். மேலும் எலாஸ்டிக் போன்று வளைந்து நெளிந்து மைக்கேல் ஜாக்சன் போல் ஆடும் பிரபு தேவாவின் நடன அசைவுகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்த திறமை இவரை அவரின் அப்பாவை விட உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது.
அதேபோல் ஹீரோவாகவும் திரையுலகில் அறிமுகமான பிரபு தேவா, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் முன்னணி ஹீரோவாகவும் இடம்பிடித்தார். இவர் நடித்த சில படங்கள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் லிஸ்டில் உள்ளது. மேலும் பிரபு தேவாவின், அண்ணன் - தம்பி இருவருமே நடிகர்களாகவும் நடன இயக்குனர்கள் ஆகவும் இருந்தாலும், பிரபுதேவா அளவுக்கு அவர்களுக்கு பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
அதிர்ச்சி... விஜய்யுடன் பத்ரி, பிரியமானவளே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த 'கசான் கான்' மரணம்!
இவர் நடிகர், நடன இயக்குனர், என்பதை தாண்டி... இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பன் முக திறமை கொண்ட கலைஞராக இருந்து வருகிறார். பிரபுதேவா 1995 ஆம் ஆண்டு, தன்னுடைய டான்ஸ் ட்ரூப்பில் நடனமாடிய டான்ஸர்களில் ஒருவரான ரமலாதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் பிரபுதேவாவின் மூத்த மகன் உடல் நல குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிர் இழந்தார்.
மகனின் இறப்பால் மன அழுத்தத்தில் இருந்த பிரபுதேவா, பின்னர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்த விவாகரத்துக்கு காரணம் நயன்தாராவுடன் பிரபு தேவாவுக்கு இருந்த காதல் தான். திருமணம் வரை இந்த உறவு சென்ற நிலையில், பின்னர் பிரேக் அப்-பில் முடிந்தது.
ஷர்ட்டை கழட்டி... உள்ளாடையோடு கவர்ச்சி விருந்து வைத்த தமன்னா! வேற லெவல் போட்டோ ஷூட்..!
நயன்தாராவை பிரிந்த பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா, கடந்த 2020 ஆம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான ஹிமானி சிங் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் நடந்து பல மாதங்கள் கழித்து தான் இந்த தகவல் வெளியே வந்தது.
மேலும் இதனை பிரபுதேவாவின் குடும்பத்தினரே உறுதி செய்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது பிரபுதேவா ஹிமானி சிங் தம்பதிக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்த தகவல் வெளியானது. பிரபு தேவாவின் குடும்பத்தில் பிறந்த முதல் குழந்தை என்பதால் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பிரபுதேவா, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் வந்து, குழந்தை பிறந்ததற்காக நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு கோவிலுக்கும் பிரபுதேவா சென்று நேர்த்தி கடன் செலுத்தியதாக கூறப்படுகிறது.
பிரபுதேவாவின் சொந்த ஊரான கர்நாடக மாநிலம் தொட்டபல்லாப்பூர் என்ற பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தான் பிரபுதேவா சென்று வந்துள்ளார். அப்போது இவரைப் பார்த்ததும் ரசிகர்கள் பலர் சூழ்ந்து கொள்ள, அவர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.