கண்ட இடத்தில் கை வைத்து.. ஐஸ்வர்யா ராய்யிடம் பளார் வாங்கிய தமிழ் நடிகர்? இவரா... அவரா... ஆராயும் நெட்டிசன்கள்!
நடிகை ஐஸ்வர்யா ராய்யிடம், ஷூட்டிங் ஸ்பாட்டில் தமிழ் நடிகர் ஒருவர் அத்து மீறி நடந்து கொண்டதால், கண்ணம்
சிவக்க அரை வாங்கியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ராய், 1994-இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இவருக்கு கிடைத்த இந்த அழகி பட்டம் தான் இவர் திரையுலகின் உள்ளே நுழைய காரணமாகவும் அமைந்தது. உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய்யை, நடிகையாக அறிமுகம் செய்த பெருமை, இயக்குனர் மணிரத்னத்தை தான் சேரும். அந்த வகையில், எம்.ஜி.ஆர் - கலைஞர் கருணாநிதி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட, 'இருவர்' படத்தில், ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் வேடத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய்.
இந்த படத்தை தொடர்ந்து இந்தி மொழி படங்களில் நடிக்க துவங்கினார். மேலும் பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராய், தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த படங்கள் தோல்வியை தழுவினாலும் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்துள்ளது.
அம்மாவுக்காக புதிய வீட்டை இடித்த சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்! ஏன் தெரியுமா?
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் போது ஐஸ்வர்யா ராய் 1999ஆம் ஆண்டு முதல், நடிகர் சல்மான்கானுடன் "Dating" செய்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட போதிலும், கருத்து வேறுபாடு காரணமாக 2001ஆம் ஆண்டு தங்களின் காதலை முறித்து கொண்டனர். சல்மான் கான், இவரை காதலிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்து துன்புறுத்தி, கடுமையாக நடந்து கொண்டது தான் இவர்கள் பிரிவுக்கு காரணம் என கூறப்பட்டது.
அதே நேரம் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் மறுத்துப் பேசியிருந்தார். இருவரும் உடன்பாடுடன் தான் பிரேக் அப் செய்ததாகவும் தெரிவித்தார். காதல் முறிவை அறிவித்த பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா ராய், 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
இது நம்ப லிஸ்டுலையே இல்லையே! லியோ படத்தில் இணைந்த தனுஷ் பட ஹீரோயின்? வெளியான ஆச்சர்ய தகவல்!
தற்போது பாலிவுட் திரையுலகே பொறாமை கொள்ளும் நட்சத்திர ஜோடியாக வாழ்ந்து வருகிறார்கள் ஐஸ்வர்யா ராய் - அபிஷக் பச்சன் தம்பதி. இவர்களுக்கு ஆராத்யா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் தமிழ் நடிகர் ஒருவரை, ஐஸ்வர்யா ராய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அரைந்துவிட்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.
ஐஸ்வர்யா ராய் தமிழில், விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்களிலேயே நடித்துள்ள நிலையில்... இவரிடம் அடிவாங்கியது ஒரு சாக்லேட் ஹீரோ என்று கூறப்படுவதால்... நெட்டிசன்கள் இந்த இருவரில் ஒருவராக இருக்குமே? என... (பிரஷாந்த் மற்றும் அப்பாஸ்) ஆகிய இரண்டு பிரபலங்களின் பெயர்களை யுகத்தில் அடிப்படையில் கூறி வருகிறார்கள். அதே நேரம் இப்படி ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்ததா? என்பது தெரியவில்லை.