- Home
- Cinema
- 50 வயதில் மீண்டும் அப்பாவான நடிகர் பிரபு தேவா! இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தை.. மகிழ்ச்சியில் குடும்பம்!
50 வயதில் மீண்டும் அப்பாவான நடிகர் பிரபு தேவா! இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தை.. மகிழ்ச்சியில் குடும்பம்!
நடிகர் பிரபு தேவாவுக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் திரை உலகில், முன்னணி நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையோடு விளங்கும் நடிகர் பிரபுதேவா, தன்னுடைய முதல் மனைவி ரமலதாவை, 1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், அது பெரிதாக வெடித்து ஒரு நிலையில் விவாகரத்து வரை சென்றது. இதற்க்கு முக்கிய காரணமாக இருந்தவர், நடிகை நயன்தாரா தான். பிரபு தேவாவை உயிருக்கு, உயிராக காதலித்து வந்த நிலையில்... இருவரின் உறவும் திருமணம் வரை சென்று பிரிந்தது.
பிரபுதேவா, நயன்தாராவின் காதல் தோல்விக்கு பின்னர், தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவதிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட்டான ஹிமானி சிங் என்பவரை பிரபு தேவா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த தகவலை பிரபு தேவாவின் மூத்த சகோதரர் ராஜு சுந்தரம் உறுதி செய்தார். திருமணம் ஆகி இரண்டு வருடங்களாக மனையுடன் பொது இடத்திற்கு வருவதை தவிர்த்து வந்த பிரபு தேவா, கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிரபுதேவாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகும் நிலையில், இப்போது தான் இந்த செய்தி வெளியாகியுள்ளது. மேலும் குழந்தைக்காக வேண்டி கொள்வதற்காக தான், பிரபுதேவா தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் திருப்பதி வந்ததாகவும் கூறப்படுகிறது..
பிரபுதேவாவின் முன்னாள் மனைவிக்கு ஆண் குழந்தைகளே இருக்கும் நிலையில், அவருடைய அண்ணன் மற்றும் தம்பிகளுக்கும் ஆண் குழந்தைகள் தான் உள்ளனர். எனவே தற்போது பிரபுதேவா குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதால், குடும்பத்தினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபு தேவா தன்னுடைய ஐம்பது வயதில் இரண்டாவது மனைவியின் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள தகவல், சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதுடன். ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். பிரபு தேவா தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.