எலகென்ட் அழகில் ரசிகர்களை மயக்கிய வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஜோடி! வெளியானது நிச்சயதார்த்த புகைப்படங்கள்!
வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முடிவடைந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
காதல் திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் சிலர், உண்மையிலேயே காதல் வலைக்குள் சிக்கி, திருமண பணத்திலும் இணைந்து வாழ துவங்கி விடுகிறார்கள். அந்த காலத்து சாவித்திரி - ஜெமினி கணேசனின் துவங்கி, இந்த காலத்தில் பிரசன்னா - சினேகா , சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி, என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த நட்சத்திர ஜோடிகள் லிஸ்டில் புதிதாக இணைய உள்ளனர் சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து வந்த வாரிசு நடிகரான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஜோடி. கடந்த சில வருடங்களாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக டேட்டிங் செய்து வரும் வருண் தேஜ் மற்றும் , லாவண்யா திரிபாதி ஜோடி காதலித்து வருவதாக கூறப்பட்ட போது, வாய் திறக்காமல் இருந்த இந்த ஜோடி, கடந்த வாரம், தங்களின் திருமண நிச்சயதார்த்தம் குறித்து அதிகார பூர்வமாக அறிவித்தனர்.
இதை தொடர்ந்து, வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் குடும்பத்தினர் முன்னிலையில், வெள்ளிக்கிழமை (நேற்று) இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. வருண் தேஜ் ஆறடி உயரத்தில்... வெள்ளை நிற ஜிப்பா அணிந்துள்ளார். லாவண்யா திரிபாதி பச்சை நிற சேலையில், எலகென்ட் அழகில் தன்னுடைய அழகால் பார்ப்பவர்கள் மனதை மயக்குகிறார்.
வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி ஆகியோர் மிஸ்டர் , ராயப்பிரி போன்ற படங்களில் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும், மிஸ்டர் படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றிருந்த போது இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க துவங்கியதாக கூறப்படுகிறது. தற்போது ரகசிய டேட்டிங்கை வெளிப்படையாக அறிவித்து திருமநாதரிக்கும் தயாராகியுள்ளது இந்த ஜோடி.
வருண், லாவண்யா திருமணத்தை டெஸ்டினேஷன் திருமணமாக நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வருணும், லாவண்யாவும், இவர்கள் காதல் மலர்ந்த இடமான இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது. டெஸ்டினேஷன் திருமணங்களுக்கு இத்தாலி என்று பெயர் விரைவில் வருண் லாவண்யா திருமணம் குறித்த முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.