தொடர்ந்து ஏமாற்றி கொண்டே இருக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! ஒரு வருடம் ஆகிடுச்சு? கடுப்பான ரசிகர்கள்!
நயன்தாரா - விக்னேஷ் திருமண வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், ஒரு வருடம் ஆன பிறகும் அதுபற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை இதனால் கடுப்பாகி இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி, காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்திற்கு, வழங்கினர்.
இதன் காரணமாக, நயன் - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என யாருக்குமே செல் போன், வீடியோ கேமரா போன்றவை எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அதே போல் இவர்களின் திருமணத்தை முதலில் திருப்பதியில் நடத்த திட்டமிட்ட நிலையில்... ஓடிடி நிறுவனத்திற்கு மிகப்பெரிய தொகைக்கு திருமணத்தை ஒளிபரப்பு உரிமையை வழங்கி விட்டதாலும், திருப்பதியில் திருமணம் நடந்தால், அங்கு கேமராக்கள் வைத்து படம் பிடிக்கவும், பிரபலங்கள் வருவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால், கடைசி நேரத்தில் தங்களின் திருமண இடத்தையும் மஹாபலிபுரத்திக்கு மாற்றினர்.
திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் நயன் - விக்கி திருமண வீடியோ நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. முதலில் இவர்களின் திருமண ஈவெண்ட்டை இயக்குனர் கெளதம் மேனன் இயக்கினார் என கூறப்பட்ட நிலையில், அவர் இந்த செய்தியை மறுத்தார். பின்னர் விக்னேஷ் சிவனே இயக்கியதாகவும் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு, இவர்களின் திருமண வீடியோ குறித்த ஒரு டீசரை மட்டுமே வெளியிட்ட நெட்பிலிக்ஸ் நிறுவனம் இதுவரை நயன்தாரா - விக்கி திருமண வீடியோவை வெளியிடவில்லை.
ஆனால் தற்போது நயன் விக்கி ஜோடி தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளையே கொண்டாடி விட்டபோதிலும், தற்போது வரை இவர்களின் திருமண வீடியோவை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனை குறிப்பிட்டு சில நெட்டிசன்கள்... கடுப்பாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வருடமாவது வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தனுஷ் மிஸ்ஸிங்... செல்வராகவன் குடும்பத்தோடு திருமண நாளை கொண்டாடிய கஸ்துரி ராஜா - விஜயலட்சுமி தம்பதி!