சிம்பிள் மொமெண்ட்டை ஸ்பெஷல்லாக்கிய நண்பர்கள்! விக்கி கையை பிடித்து கொண்டு கண்ணீர் விட்ட நயன்தாரா! வீடியோ..

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் முதலாம் ஆண்டு திருமணநாள் முன்னிட்டு... நண்பர்கள் இணைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்பெஷல் மொமெண்ட்டின் வீடியோவை தற்போது, விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார்.
 

nayanthara and vignesh shivan crying special moment video goes viral

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ள நடிகை நயன்தாராவும், இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்தாண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். சுமார் 7 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி, எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்பது, பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், ஒருவழியாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக இந்த ஜோடி தங்களின் காதல் வாழ்க்கையில் இருந்து அடுத்த கட்டமான, திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தது.

திருமணத்திற்க்கு பிறகும் காதல் ஜோடிகளை போல், சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் இந்த ஜோடி... தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை, தங்களின் இரட்டை குழந்தைகளுடன் கொண்டாடி வருகின்றனர். விக்கி - நயன் இருவரும், திருமண நாள் அன்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சில சில புகைப்படங்களையும் வெளிட்டு வருகிறார்கள்.

nayanthara and vignesh shivan crying special moment video goes viral

விக்கி - நயன் குழந்தைகள் இவ்வளவு பெருசா வளர்ந்துவிட்டார்களா? திருமண நாளில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!

மேலும் விக்கி - நயன் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை மழை போல் மொழிந்து வருகிறார்கள். குறிப்பாக பல பிரபலங்கள், இந்த ஜோடிகளுக்கு நேரில் சென்றும், போன் மூலம் தொடர்பு கொண்டும் வாழ்த்தி வருகிறார்கள். நயன் - விக்கி இருவரும் சின்ன சின்ன கொண்டாட்டங்கள் என்றாலே... அதனை சுதந்திரமாக வெளிநாட்டில் செல்லபிரேட் செய்ய பிரைவேட் ஜெட்டில் கிளம்பும் நிலையில், தங்களுடைய முதல் திருமண ஆண்டை வீட்டிலேயே எளிமையாக கொண்டாடியுள்ளனர்.

nayanthara and vignesh shivan crying special moment video goes viral

கண் முழித்த அப்பத்தா..! கை ரேகைக்காக நடக்கும் போராட்டம்.. 'எதிர்நீச்சல்' சீரியலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!

இதற்க்கு முக்கிய காரணம் இவர்களின் குழந்தைகள் தான். இரண்டு குட்டி குழந்தைகளை வைத்து கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வது கொண்டும் கடினம் என்பதால்... வீட்டிலேயே கொண்டாடியுள்ளனர். அதே போல் நயன் - விக்கி இருவரும் தங்கள் இருவரின் நட்புறவுகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்து... திருமண நாளுக்கு ட்ரீட் வைத்து கொண்டாடியுள்ளனர். நண்பர்கள் அனைவரும் ஒரு சிம்பிள் மற்றும் ஸ்பெஷல் மொமெண்ட் மூலம் நயன்தாராவையே ஒரு நிமிடம் கண்கலங்க வைத்துள்ளனர்.

nayanthara and vignesh shivan crying special moment video goes viral

தனுஷ் மிஸ்ஸிங்... செல்வராகவன் குடும்பத்தோடு திருமண நாளை கொண்டாடிய கஸ்துரி ராஜா - விஜயலட்சுமி தம்பதி!

நானும் ரௌடி தான் படத்தில், இடம்பெற்ற "கண்ணான கண்ணே நீ கலங்காதடி... " என்கிற பாடலை ஒருவர், புல்லாங்குழலில் வாசிக்க, இது நயன் மற்றும் விக்கிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த பாடலை கேட்டதும், பழைய நினைவுகள் மீண்டும் நயன் மனதில் எட்டி பார்க்க, ஒரு விக்கி கையை பிடித்து கொண்டு, நயன் கண் கலங்கிய வீடியோவை விக்னேஷ் சிவன் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுளளார். 

nayanthara and vignesh shivan crying special moment video goes viral

நேத்து தான் திருமணம் நடந்துச்சு! முதலாம் ஆண்டு திருமண நாளில் நயனுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய விக்கி!

மேலும் இந்த பாடலை இசைத்த அவரின் நண்பர் குறித்து விக்னேஷ் சிவன் போட்டுள்ள பதிவில்.. "எங்களின் எளிமையான அதே சமயம் சிறப்பான தருணங்கள் இது. எங்களின் முதலாம் ஆண்டு நினைவு கொண்டாட்டமாக இது இருந்தது. நவீன்! நான் உன்னுடன் வளர்ந்தேன்! உன்னுடன் ஒரே மேடையில் டிரம்ஸ் வாசித்திருக்கிறேன், என் வாழ்க்கையின் பல நிலைகளிலும் நீ வாசித்ததைக் கேட்டுள்ளேன்! ஆனால் இந்த நிலை தான் எங்கள் அனைவராலும் மறக்க முடியாத மற்றும் சிறப்பான தருணம்! எங்களை ஆசீர்வதித்தவர்களாக உணர வைத்ததற்கு நன்றி...  நவீன் நீங்கள் ஒரு ஜாம்பவான்! மேலும் நீ எனக்கு நண்பனாக இருப்பது எனக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி தான் மச்சான். லவ் யூ & வந்ததற்கு நன்றி.என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவும் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios