நேத்து தான் திருமணம் நடந்துச்சு! முதலாம் ஆண்டு திருமண நாளில் நயனுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய விக்கி!
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், தன்னுடைய காதல் மனைவிக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விக்கியுடன் 'நானும் ரவுடி' தான் படத்தில் நடிக்க கமிட் ஆன நயன்தாரா... பின்னர் காதலிலும் கமிட் ஆகி லிவிங் டூ கெதர் வாழ்க்கையிலும் இணைந்தார். இருவரும் 2016 ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்ட நிலையில், அதனை வெளிப்படுத்தி கொள்ளாமல், சுமார் 7 ஆண்டு காதல் ஜோடிகளாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்த நிலையில், கடந்த ஜூன் 9-ந் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் சென்னை ECR சாலை, மகாபலிபுரத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இவர்களது திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதிம் கார்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மேலும் இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததால்... திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பிரபலங்களுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதே போல் நயன்தாரா - விக்கி திருமணத்தில் கலந்து கொள்ள 200 பேருக்கு மட்டுமே அனுமதியும் வழக்க பட்டது.
கடற்கரையில் உள்ள கண்ணாடி மாளிகையில் திருமணம் செய்து கொண்ட பின்னர், இரண்டு முறை ஹானி மூனுக்கும் சென்று என்ஜாய் செய்தது விக்கி - நயன் ஜோடி.
துணை இயக்குநரை சாதி வெறியோடு திட்டிய நடிகர் விக்னேஷ்! பகிரங்க மன்னிப்பு கேட்டார்!
nayanthara
மேலும் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் திரையுலகில் நயன்தாரா கவனம் செலுத்திய நிலையில், திடீர் என திருமணம் முடிந்த 4 மாதத்திலேயே, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராக மாறிய தகவலையும் வெளியிட்டனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டு, நாளையுடன் 1 ஆண்டு முடிவடைந்து 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், இதுகுறித்து மிகவும் உருக்கமாக பதிவுக்கு, சில ரொமான்டிக் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.
நடிகரின் கார் மோதி... வெற்றிமாறனின் துணை இயக்குனர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மரணம்!
இது குறித்து விக்கி போட்டுள்ள பதிவில், 'உனக்கு நேற்று திருமணம் நடந்தது! திடீரென்று என் நண்பர்கள் "ஹேப்பி ஃபர்ஸ்ட் இயர் மேரேஜ் ஆனிவர்சரி" என்று எனக்கு மெசேஜ் அனுப்புகிறார்கள். சார்பியல் கோட்பாடு உண்மை தான். "லவ் யூ தங்கமே! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் எங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்! இன்னும் வெகுதூரம் போகவேண்டும்! ஒன்றாகச் நிறைய சாதிக்க வேண்டும்!
நம் வாழ்வில் உள்ள அனைத்து நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், சர்வ வல்லமையுள்ள கடவுளின் ஏராளமான ஆசீர்வாதங்களுடனும் எங்கள் திருமணத்தின் இரண்டாவது ஆண்டை எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களுடன் கொண்டு வருவோம். எங்கள் குழந்தைகள் உயிர் & உலகம் என பதிவிட்டுள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரபல இயக்குனருக்கு மாரடைப்பு.! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!