துணை இயக்குநரை சாதி வெறியோடு திட்டிய நடிகர் விக்னேஷ்! பகிரங்க மன்னிப்பு கேட்டார்!
உதவி இயக்குனரை சாதி பெயரை சொல்லி திட்டிய சர்ச்சையில் சிக்கிய நடிகர் விக்னேஷ், தற்போது பகிரங்கமாக தன்னுடைய மன்னிப்பை கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 'சின்னதாய்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். இந்த படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து 'கிழக்குச் சீமையிலே', 'உழவன்', 'பசும்பொன்', உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். சமீப காலமாக இவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில், சீரியல் பக்கம் சாய்ந்தார். அதே போல் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.
மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுக்க முட்டி மோதிய அயல் நாட்டு ரசிகர்கள்!
நடிப்பை தாண்டி, பாஜக கட்சியின் கலை இலக்கிய பொறுப்பாளராகவும் விக்னேஷ், சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் உதவி இயக்குனர் சுபாஷ் என்பர், தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை விக்னேஷிடம் கேட்ட போது, அவரை மிரட்டுவது போல் பேசியது மட்டும் இன்றி, சாதியின் பெயரை சொல்லி விக்னேஷ் திட்டியது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் உதவி இயக்குனரை மிகவும் மோசமாக திட்டி இருந்தார் விக்னேஷ்.
நடிகரின் கார் மோதி... வெற்றிமாறனின் துணை இயக்குனர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மரணம்!
இதன் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே விக்னேஷ் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டரில் கூறி இருந்தார். மேலும் பல படங்களில் நாயகனாக, துணை கதாபாத்திரங்களாக நடித்தவர் இப்போது எந்த படங்களும் இல்லாததால் ஏனோ, வணிகம் செய்கிறார் போல. எவ்வளவு சாதி வெறியோடு பேசுகிறார் பாருங்கள். தமிழ்நாடு காவல்துறை இவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இவரை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவல்துறையினருக்கும், இதனை டேப் செய்திருந்தார்.
ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரபல இயக்குனருக்கு மாரடைப்பு.! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
வன்னியரசுவின் பதிவு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நடிகரும் - பாஜக பிரமுகருமான விக்னேஷ் வன்னியரசுவை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி, உதவி இயக்குனர் சுபாஷ் விஷயத்தில் தான் நடந்து கொண்டது தவறு தான் என்பதை உணர்ந்து, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விவகாரம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.