MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வடம் முதல் வித் லவ் வரை... மார்ச் 06ந் தேதி தியேட்டர் & OTTயில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ்

வடம் முதல் வித் லவ் வரை... மார்ச் 06ந் தேதி தியேட்டர் & OTTயில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ்

விமல் நடித்த வடம், ஏ.எல்.விஜய் இயக்கிய காதல் ரீசெட் ரிப்பீட் உள்பட இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகுது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 05 2026, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
This Week Theatre and OTT Release Movies
Image Credit : X

This Week Theatre and OTT Release Movies

வார வாரம் புதுப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் வருகிற மார்ச் 6ந் தேதி தமிழில் 10 புதிய படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதுமட்டுமின்றி ஓடிடியில் இந்த வாரம் நான்கு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள், எந்தெந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தியேட்டர் ரிலீஸ் படங்கள்

26
காதல் ரீசெட் ரிப்பீட்
Image Credit : X

காதல் ரீசெட் ரிப்பீட்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன் மற்றும் ஜியா சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள படம் காதல் ரீசெட் ரிப்பீட். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இது ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படம். இப்படம் வருகிற மார்ச் 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Related Articles

Related image1
OTTக்கு வரும் வித் லவ் படம்... வாரிசுருட்டிய லைஃப்டைம் வசூல் இத்தனை கோடியா?
Related image2
வித் லவ் முதல் தாய் கிழவி வரை... பிப்ரவரியில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் மூவீஸ் இதோ
36
வடம்
Image Credit : X

வடம்

நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் வடம். இப்படத்தை கேந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நட்டி நட்ராஜ் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை பிரசன்ன குமார் மேற்கொண்டுள்ளார். இப்படமும் மார்ச் 6ந் தேதி திரைக்கு வருகிறது.

46
முஸ்தபா முஸ்தபா
Image Credit : X

முஸ்தபா முஸ்தபா

நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் முஸ்தபா முஸ்தபா. இப்படத்தில் நாயகியாக மோனிகா நடித்துள்ளார். இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கி உள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜோன்ஸ் இசையமைத்துள்ளார். இப்படம் மார்ச் 6-ந் தேதி திரைகாண உள்ளது.

56
தியேட்டருக்கு வரும் சிறு பட்ஜெட் படங்கள்
Image Credit : X

தியேட்டருக்கு வரும் சிறு பட்ஜெட் படங்கள்

மேற்கண்ட படங்களுடன் 7 சிறு பட்ஜெட் படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன. அவை, யார்ரா அந்த பையன்.. நான் தான் அந்த பையன், வசூல் மன்னன், ஓ பட்டர்ஃபிளை, மூரி, செல்லமடா நீ எனக்கு, 99/66, அனோமி ஆகிய படங்களும் மார்ச் 6-ந் தேதி திரைக்கு வருகின்றன. இதில் வசூல் மன்னன் திரைப்படத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜாக நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா ஹீரோவாக நடிக்கிறார். அதேபோல் 99-66 திரைப்படத்தில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி நாயகியாக நடித்துள்ளார்.

66
ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்?
Image Credit : X

ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்?

வருகிற மார்ச் 06-ந் தேதி நான்கு தமிழ் படங்கள் ஓடிடிக்கு வருகின்றன. அதில் ஒன்று, செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அபிஷன் ஜீவிந்த் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வித் லவ். அப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர விஜய் சேதுபதி நடித்த மெளனப் படமான காந்தி டாக்ஸ் திரைப்படம் ஜீ 5 ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. மேலும் பிக்பாஸ் பிரபலம் சரவணன் நாயகனாக நடித்துள்ள டியர் ரதி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர விஜயகுமரன் இயக்கத்தில் உருவான க்ரானி திரைப்படமும் இந்த வாரம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘டியூட்’ மமிதாவின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ‘தாய் கிழவி’ ராதிகா..!
Recommended image2
தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கேரளத்து பைங்கிளி.. தமிழ் ரசிகர்களின் செல்லக் கிளி! - ரேஷ்மா முரளிதரன் மிரட்டல் பின்னணி!
Related Stories
Recommended image1
OTTக்கு வரும் வித் லவ் படம்... வாரிசுருட்டிய லைஃப்டைம் வசூல் இத்தனை கோடியா?
Recommended image2
வித் லவ் முதல் தாய் கிழவி வரை... பிப்ரவரியில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் மூவீஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved