விக்கி - நயன் குழந்தைகள் இவ்வளவு பெருசா வளர்ந்துவிட்டார்களா? திருமண நாளில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் பிள்ளைகள் இவ்வளவு பெருசா வளர்ந்து விட்டார்களா? என ஆச்சரியப்படுத்தும் புகைப்படம் ஒன்றை, ஷேர் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றிக்கனியை ருசித்தவர் நயந்தாரா. இதைத் தொடர்ந்து, தன்னுடைய இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடி போட்ட இவர், அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
இடையில் சிம்பு, பிரபு தேவா, ஆகியோருடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நயன் பின்னர் அதிலிருந்து மீண்டு திரையுலகில் கவனம் செலுத்தினார். இதுவே இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அளவுக்கு உயர்த்தியது. அதே போல் ஏற்கனவே சில காதல் தோல்விகளை சந்தித்த போதிலும், மனம் தளராது மீண்டும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார். 'நானும் ரவுடிதான்' படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த போது, இவர்களுக்குள் பற்றி கொண்ட காதல் தீ ஏழு வருடங்கள் கழித்து திருமணத்திலும் முடிந்தது.
தனுஷ் மிஸ்ஸிங்... செல்வராகவன் குடும்பத்தோடு திருமண நாளை கொண்டாடிய கஸ்துரி ராஜா - விஜயலட்சுமி தம்பதி!
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி, இதே நாளில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணத்தில், கோலிவுட், பாலிவுட், திரை உலகை சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பின்னரும், தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவனை ஊரறிய திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்கவும் தயாராகி விட்டனர். திருமணமான நான்கே மாதத்தில், இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு... வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
தங்களுடைய குழந்தைகளுக்கு உயிர் - உலகம் என வித்தியாசமான பெயர் சூட்டி உள்ள இருவரும், இன்று தங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள் இருப்பதால், நயன்தாராவின் பிறந்தநாளை கூட வெளிநாட்டில் கொண்டாடாமல், தங்களுடைய சென்னையில் உள்ள வீட்டிலேயே கொண்டாடிய இந்த ஜோடி, தற்போது திருமண நாளையும் அதேபோல் வீட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
நேற்று இரவே நயன்தாராவுக்கு வாழ்த்து கூறி விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்கள் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட நிலையில், இதைத்தொடர்ந்து உயிர் - உலகம் இருவரும் தங்களுடைய பெற்றோரான, நயன் - விக்கிக்கு வாழ்த்து கூறும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படத்தில் உயிர் - உலகம் இருவரும் திரும்பி நிற்பது போல் உள்ளது. மேலும் அதற்குள் இவ்வளவு பெருசா நயன் விக்கியின் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களா? என ரசிகர்கள் பலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்களின் லேட்டஸ்ட் புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.