MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனுஷ் மிஸ்ஸிங்... செல்வராகவன் குடும்பத்தோடு திருமண நாளை கொண்டாடிய கஸ்துரி ராஜா - விஜயலட்சுமி தம்பதி!

தனுஷ் மிஸ்ஸிங்... செல்வராகவன் குடும்பத்தோடு திருமண நாளை கொண்டாடிய கஸ்துரி ராஜா - விஜயலட்சுமி தம்பதி!

இயக்குனரும் - தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா... தன்னுடைய திருமண நாளை, மூத்த மகன் செல்வராகவன் குடும்பத்தோடு கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jun 09 2023, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான செல்வராகவன் மற்றும் முன்னணி நடிகரான தனுஷ் ஆகியோரின் தந்தை கஸ்தூரிராஜா இன்று, தன்னுடைய திருமண நாளை மனைவி விஜயலட்சுமி உடன் இணைந்து கொண்டாடியுள்ளார் இதுகுறித்த புகைப்படங்களை கீதாஞ்சலி செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட வைரலாகி வருகிறது.

29

 இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா, கிராமப்புறங்கள் சார்ந்த திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். பிரபல இயக்குனரும், நடிகருமான, விசுவிடம் துணை இயக்குனராக பணியாற்றி பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

விக்ரம் முதல் விஜய் சேதுபதி வரை... கூச்சமே இல்லாமல் திருநங்கை கெட்டப்பில் பொளந்து கட்டிய நடிகர்கள்!

39

இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் - மீனா நடிப்பில் வெளியான 'என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்தார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

49

இதைத்தொடர்ந்து ஆத்தா உன் கோவிலிலே, சோலையம்மா, தாய் மனசு, வாசுகி, எட்டுப்பட்டி ராசா, வீரத்தாலாட்டு, கும்மி பாட்டு, உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்.. தமன்னாவுடன் சிரஞ்சீவி!

59

மேலும் ஒரு சில படங்களில் நடிகராகவும்,  சில படங்களில் இசையமைப்பாளராகவும், சில படங்களை தயாரித்தும் உள்ளார்.  இவரை தொடர்ந்து, கஸ்த்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன்... அப்பாவின் பாணியிலேயே பட இயக்குனராகவும், இளைய மகன் தனுஷ் நடிகராகவும் திரையுலகில் நுழைந்து வெற்றிக்கொடியை நாட்டினர்.

69

தன்னுடைய இரண்டு மகன்களும் திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கும் நிலையில், சமீப காலமாக திரையுலகில் இருந்து விலகியே இருக்கும் கஸ்தூரிராஜா, அவ்வப்போது சில பேட்டிகள் கொடுப்பதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார்.

துணை இயக்குநரை சாதி வெறியோடு திட்டிய நடிகர் விக்னேஷ்! பகிரங்க மன்னிப்பு கேட்டார்!

79

சமீபத்தில் நடிகர் தனுஷ் போயஸ் தோட்டத்தில் தன்னுடைய தாய் - தந்தைக்காக சுமார் 150 கோடி செலவில் அரண்மனை போன்ற வீடு ஒன்றை கட்டிக் கொடுத்தார். அதில் தான் தற்போது இவர்கள் இருவரும் வசித்து வருகின்றனர்.

89

இந்நிலையில் இன்று கஸ்தூரிராஜா - விஜயலட்சுமி தம்பதி தங்களுடைய திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். தனுஷ் தற்போது மதுரையில் நடந்து வரும், கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் இருப்பதால்,  பெற்றோருடன் கோவிலுக்கு வரவில்லை.

நடிகரின் கார் மோதி... வெற்றிமாறனின் துணை இயக்குனர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மரணம்!

99

மூத்த மகன் செல்வ ராகவன் மற்றும் அவருடைய மூன்று குழந்தைகள், மனைவி கீதாஞ்சலி,  ஆகியோர் திருவண்ணாமலை கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் கீதாஞ்சலி வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
செல்வராகவன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெள்ளித்திரை கொடுத்த ஏமாற்றம்.. சின்னத்திரையில் கிடைத்த சாம்ராஜ்யம்! ரேஷ்மா பசுபுலேட்டியின் 'பிஸி' ஷெட்யூல் இதோ!
Recommended image2
வடம் முதல் வித் லவ் வரை... மார்ச் 06ந் தேதி தியேட்டர் & OTTயில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ்
Recommended image3
‘டியூட்’ மமிதாவின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ‘தாய் கிழவி’ ராதிகா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved