தலைவர் 170 படத்தில் 32 வருடத்திற்கு பின் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அமிதாப்பச்சன்! வெளியான வேற லெவல் அப்டேட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170-ஆவது படத்தில் ரஜினிகாந்துடன், அமிதாப்பச்சன் இணைந்து நடிக்க உள்ளகாக மாஸ் தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால், பாலிவுட் திரையுலகில் அமிதாப் பச்சன். தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த இரு பெரிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலக ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை.தூண்டியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது வரவிருக்கும் படங்களான 'ஜெயிலர்' மற்றும் 'லால் சலாம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு தற்காலிகமாக 'தலைவர் 170' என்று அழைக்கப்படும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தை 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய, இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்க உள்ளார்.
'மர்மதேசம்' இயக்குனர் நாகா உடல்நிலை குறித்து பரவிய வந்தந்தி குடும்பத்தினர் விளக்கம்!
இந்த படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் பிக் பி என பாலிவுட் திரையுலகினரால் அழைக்கப்படும், அமிதாப்பச்சனும் நடிக்க உள்ளாராம்.
இதற்க்கு முன்னதாக, ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து, கடந்த 1991 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'ஹம்' என்கிற படத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் படமான 'பாஷா'வுக்கு 'ஹம்' ஒரு முன்னோட்ட படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது, இவர்கள் இருவரும் சுமார் 32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் வெள்ளித்திரையில் இணைந்து நடிக்க உள்ளனர். தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க தற்போது பேச்சு வார்த்தை மும்முரமாக நடந்து வருவதாகவும், விரைவில் இது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகலாம் என நம்பப்படுகிறது.
ரஜினிகாந்தின் 170 ஆவது திரைப்படம், என்கவுன்டர் தண்டனைக்கு எதிராக போராடும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. அந்த காவல் துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.