'மர்மதேசம்' இயக்குனர் நாகா உடல்நிலை குறித்து பரவிய வந்தந்தி குடும்பத்தினர் விளக்கம்!

'மர்மதேசம்' சீரியல் இயக்குனர் நாகா உடல் நிலை குறித்து வெளியான வதந்தியை தொடர்ந்து, அதற்கு குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
 

Marmadesam director Naga health condition family about truth

மர்மதேசம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன், உள்ளிட்ட பல மர்ம தொடர்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் நாகா, இவர் இயக்கிய சீரியல்கள் ஒவ்வொருமே 90ஸ் கிட்ஸின் பேவரட் தொடர்களாகும். இப்போது வரை இவருடைய படைப்புகளுக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டு தான் உள்ளது. 

நாகா சீரியல் தொடர்களை, விறுவிறுப்பான கதைக்களத்தோடு காட்சியமைப்பதை கண்டு ஆச்சரியம் பட்ட பிரமாண்ட இயக்குனர் சங்கர்,  நாகாவுக்கு படம் இயக்கவும் வாய்ப்பு கொடுத்தார். அந்த வகையில் நாகா நடிகர் நந்தா மற்றும் சாயா சிங் நடித்த ஆனந்தபுரத்து வீடு என்ற படத்தையும் இயக்கி ஹிட் கொடுத்தார். தொடர்ந்து பல சீரியல்களில் இயக்கி வந்ததாலும், ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றி வந்ததாலும் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனது. 

சிம்பிள் மொமெண்ட்டை ஸ்பெஷல்லாக்கிய நண்பர்கள்! விக்கி கையை பிடித்து கொண்டு கண்ணீர் விட்ட நயன்தாரா! வீடியோ..

Marmadesam director Naga health condition family about truth

இந்நிலையில் தற்போது ஓடிடி நிறுவனம் ஒன்றிற்காக வெப் தொடர் ஒன்றை நாகா இயக்கி வந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இவர் மயங்கி விழுந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அங்கு இயக்குனர் நாகாவுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. பின்னர் அவர் அபாய கட்டத்தை தாண்டி, தற்போது உடல் நலத்தோடு இருப்பதாகவும் கூறப்பட்டது.

விக்கி - நயன் குழந்தைகள் இவ்வளவு பெருசா வளர்ந்துவிட்டார்களா? திருமண நாளில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!

ஆனால் திடீரென ஒரு சிலர், 'மர்ம தேசம்' சீரியல் இயக்குனர் நாகா மரணம் அடைந்து விட்டதாக, சமூக வலைதளத்தில் கொளுத்தி போட, அந்த தகவல் தீயாக பரவி வந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நாகாவின் குடும்பத்தினர் இந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை என தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios