பொம்மை படத்தை புரோமோட் செய்த பிரியா பவானி ஷங்கர்! 'ஆதிபுருஷ்' படத்தை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !
பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய படத்தை புரோமோட் செய்வதற்காக புகைப்படம் ஒன்றை வெளியிட, இதை பார்த்து நெட்டிசன்கள், பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தை கலாய்த்து வருகிறார்கள்.
தமிழில் 'அபியும் நானும்', 'மொழி', போன்ற படங்களை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தவர் இயக்குனர் ராதா மோகன். இவர் 'காற்றின் மொழி' படத்தை தொடர்ந்து தற்போது இயக்கியுள்ள 'பொம்மை' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
எஸ் ஜே சூர்யா - பிரியா பவானி சங்கர் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள, பொம்மை திரைப்படத்தை, பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ப்ரோமோட் செய்ய, இதற்கு நெட்டிசன்கள் சிலர் பொம்மை படம் வெளியாகும் அன்று திரைக்கு வரும் பிரபாஸின் பிக் பட்ஜெட் படமான ஆதிபுருஷ் படத்தை கலாய்ப்பது போல் கமெண்ட் போட்டு வருகிறார்கள் .
நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'அகிலன்' திரைப்படம் வெளியாகி, படுதோல்வி அடைந்த நிலையில், இதை தொடர்ந்து வெளியான 'பத்து தல' திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது.
ஒருசில படங்களில், கதாநாயகியாக துண்டு சீனில் 10 நிமிடம் மட்டுமே எட்டிப்பார்த்த, பிரியா பவானி ஷங்கருக்கு பொம்மை திரைப்படம் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமான படமாக இருக்கும் என்பது ட்ரைலரை பார்த்ததுமே தெரிந்தது. இந்த படத்தில் ஒரு பொம்மை மீது வெறி கொண்ட காதலுடன் இருக்கும் எஸ் ஜே சூர்யாவை, காதலிக்கும் பொம்மையாக நடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். குறிப்பாக அந்த பொம்மை கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பிரியா பவானி சங்கர் பொருந்துகிறார். இதுவரை ஆபாசம் இல்லாத காட்சிகளில் நடித்த பிரியா பவானி சங்கர், இந்த படத்தில் ஒரு படி மேலே போய் முத்த காட்சிக்கு முன்னேறி உள்ளார். இப்படம் ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில். இந்த படம் குறித்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு புரமோட் செய்திருந்தார்.
டி.ராஜேந்தர் செய்த செயல்... 8 கோடி நஷ்டஈடு வழங்கிய தமிழக அரசு! ஏன் தெரியுமா?
இதைப் பார்த்து நெட்டிசன்கள் சிலர், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒருவர் 100 சதவீதம் இந்த திரைப்படம் தரமானதாக இருக்கும் என நம்புகிறேன். பிக் பட்ஜெட் கார்ட்டூன் படங்களை காட்டிலும் என கூறி ஆதிபுருஷ் படத்தை கலாய்த்துள்ளார். பொம்மை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார், இந்த படத்தில் உள்ள பாடல்களுக்கு கார்க்கி பாடல்கள் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே, ஒரு சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. இயக்குனர் ஹரி சங்கர் என்பவர் அவர் எழுதிய 'உடல்' என்ற கதையின் காப்பியாக 'பொம்மை 'இருக்கலாம் என தெரிவித்த நிலையில், 1987 ஆம் ஆண்டு வெளியான 'மனிகுயின்' என்ற பாலிவுட் படத்தின் காப்பியாகவும் இப்படம் இருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும், நாளைய தினம் இப்படம் மற்றொரு படத்தின் காப்பியா? அல்லது ராதா மோகன் சிந்தனையில் உருவான திரைப்படமா என்பது நாளை தெரிந்துவிடும்.