சமந்தா, நயன்தாரா முதல் ராஷ்மிகா மந்தனா வரை! 10 நடிகைகளின் லேட்டஸ்ட் டாட்டோஸ்!
தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகைகள் பலர், மிகவும் வித்தியாசமான படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதில் எப்படி ஆர்வம் காட்டுகிறார்களோ, அதே போல் வித்தியாசமான டாட்டூஸ் குத்தி கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், சமந்தா, ஸ்ருதி ஹாசன் போன்ற முன்னணி நடிகைகள் சமீபத்தில் போட்டுக்கொண்ட டாட்டூ பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு, பிரபல தெலுங்கு நடிகை நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், தன்னுடைய கணவரின் நினைவாக பல்வேறு டாட்டூக்களை போட்டு கொண்டார். நான்கு வருடங்கள் மிகவும் சந்தோஷமான நட்சத்திர தம்பதிகளாக இருந்த சமந்தாவும், நாகசைதன்யாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற உள்ளதை வெளிப்படையாக அறிவித்தனர். எனவே தன்னுடைய கணவரின் நினைவாக சமந்தா போட்டுக்கொண்ட
பல டாட்டூக்களை அழித்ததாக கூறப்பட்டது.
ஆனால், தன்னுடைய இடுப்புக்கு மேலே... Chay என குத்திக்கொண்டு டாட்டூவை மட்டும் அழிக்கவில்லை. சமீபத்தில் சீட்டாடல் தொடரின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது இந்த டாட்டூ ரசிகர்களால் அதிகம் பேசப்படும் ஒன்றாக இருந்தது. மேலும் கணவரை பிரிந்ததில் இருந்தே அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் சிக்கிவரும் சமந்தா, இதுவரை புதிதாக எந்த டாட்டூவையும் குத்திக்கொள்ள வில்லை என்றே கூறப்படுகிறது.
'பொன்னியின் செல்வன்' பட நடிகையான குந்தவை த்ரிஷா, தன்னுடைய உடலில் இதுவரை மூன்று டாட்டூக்களை மட்டுமே குத்திகொண்டுள்ளார். தன்னுடைய ரிஷப ராசியை வெளிப்படும் விதமாக ஒரு டாட்டூவும், டிஸ்னி கார்ட்டூன் கதாபாத்திரமான Nemo பிஷ், மற்றும் சினிமா மீது உள்ள காதலை வெளிப்படுத்தும் எந்த கேமரா ஒன்றை தன்னுடைய முதுகில் பச்சை குத்திகொண்டுள்ளார். இதை தவிர சமீப காலத்தில் அவர் எந்த டாட்டூவையும் போட்டுக்கொள்ளவில்லை.
நடிகை நயன்தாரா, பிரபு தேவாவை காதலிக்கும் நேரத்தில்... அவர் மேல் இருந்தே தீராத காதலில் பிரபு என்கிற பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தி கொண்டார். அவருடனான உறவை முறித்துக்கொண்டு பின்னர், பிரபு என்பதை Positivity என மாற்றி கொண்டார்.
ஆத்தாடி... டாட்டூ குத்துற இடமா அது? ஓப்பனாக காட்டி ரசிகர்களை மனதை ரணகளமாக்கிய அனுபமா பரமேஸ்வரன்!
ஜெயிலர் பட நடிகையான தமன்னா தன்னுடைய காலில், ஒரு பெண் சுதந்திரமாக நடனமாடுவது போலவும்... பறவை பறப்பது போலவும் இருக்கும் ஒரு டாட்டூவை குத்திகொண்டுள்ளார். அது மட்டும் இன்றி, தன்னுடைய இடுப்புக்கு கீழே பர்மனண்ட் டாட்டூ ஒன்றையும் குத்து கொண்டுள்ளார். தற்போது காதலில் சிக்கியுள்ளதால், காதலர் விஜய் வர்மா நினைவாக சில புது டாட்டூக்களை குத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதா நாயகியான அமலா பால் ஏற்கனவே தன்னுடைய காலில், ஒரு வட்டத்தின் உள்ளே அம்பு பாய்வது போல், டாட்டூ குத்தி இருந்த நிலையில், சமீபத்தில் தன்னுடைய முதுகுக்கு பின்னால் கிட்ட தட்ட ரங்கோலி போல் மிகப்பெரிய டாட்டூ ஒன்றை குத்தி கொண்டுள்ளார்.
நேஷ்னல் கிராஷ் நடிகையான ராஷ்மிகா மந்தனா 'irreplaceable' என்கிற வார்த்தையை தான் தன்னுடைய கையில் டாட்டூவாக குத்தி கொண்டுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான, ஸ்ருதி ஹாசன், தன்னுடைய பெயரை தமிழில் ஷ்ருதி என முருகனின் வேலுடன் குத்தி கொண்டுள்ளார். இதன் மூலம் ஷ்ருதி மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் இவருக்குள் புதைந்திருந்த பக்தியை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் கூறி வந்தனர்.
பருத்திவீரன் பட நடிகையான பிரியா மணி... திருமணத்திற்கு பிறகும் பிஸியான நடிகையாக இருப்பவர். நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வரும் பிரியாமணி தன்னுடைய, அப்பா மீதான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, 'daddy girl' என டாட்டூ குத்துக்கொண்டுள்ளார் .
இளம் நடிகையான அனுபமா பரமேஸ்வரன் போட்டிருந்த டாட்டூ தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. தன்னுடைய இதயத்திற்கு பக்கத்தில், மிகவும் வித்தியாசமாக குட்டியாக டாட்டூ போட்டு, ஒட்டு மொத்த ரசிகர்களையும் கிறங்க வைத்துள்ளார்.