துணிவு படத்தில் நடிக்க... லட்சத்தில் அல்ல கோடியில் சம்பளம் வாங்கிய மஞ்சு வாரியர்! எவ்வளவு தெரியுமா?
மலையாள நடிகையான மஞ்சு வாரியர் 'துணிவு' படத்தில் கதாநாயகியாக நடித்த, எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மலையாள திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மஞ்சு வாரியர், திருமணமாகி தன்னுடைய காதல் கணவரும், நடிகருமான திலீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், சினிமாவில் அதிக ஆர்வம் காட்ட துவங்கினார்.
இவர் கதையின் நாயகியாக மலையாளத்தில் தேர்வு செய்து நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதோடு , தமிழ் இயக்குனர்களின் கவனத்தையும் இவருடைய நடிப்பு ஈர்த்தது.
விஜய் டிவி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக விஜயின் தந்தை எஸ்.ஏ.சி? இது தான் டைட்டிலா..!
இதைத்தொடர்ந்து, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அசுரன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மஞ்சு வாரியர், இதில் பச்சையம்மாவாக கிராமத்து வேடத்தை ஏற்று நடித்தார். இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது மட்டும் இன்றி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாக, இவர் நடித்து சமீபத்தில் வெளியான 'துணிவு' திரைப்படத்தில் செம்ம ஸ்டைலிஷான கெட்டப்பில் கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். மேலும் ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்த இவருக்கு வாய்ப்புகளும் வருவதாக கூறப்படும் நிலையில், 'துணிவு 'திரைப்படத்தில் நடிக்க மஞ்சுவாரியர் எவ்வளவு சம்பளம் வாங்கினார்? என்பது குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி உள்ளது.
அதுவும் லட்சத்தில் அல்ல கோடியில் சம்பளம் வாங்கி உள்ளார். 'துணிவு; படத்திற்காக மஞ்சு வாரியர் 1கோடி முதல் 1.5 கோடிவரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இது அசுரன் படத்திற்கு இவர் வாங்கிய தொகையை விட இது அதிகம் என கூறப்படுகிறது.
ரத்த காயங்களுடன் நடிகை சமந்தா..! அதிர்ச்சியோடு.. அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய புகைப்படம்..!