MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • சாமி கும்பிடும் இடத்தில் கவர்ச்சி ஆடையா? திஷா பதானியை சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சாமி கும்பிடும் இடத்தில் கவர்ச்சி ஆடையா? திஷா பதானியை சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Disha Patani dress controversy: சாமி கும்பிட போற இடத்துலயா அரைகுறை ஆடை அசிங்கம் தேவையா? அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற திஷா பதானியின் கவர்ச்சி உடையை பார்த்து நெட்டிசன்கள் காறித் துப்பாத குறையாக அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 16 2026, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஆன்மிக நிகழ்வில் அநாகரிக கவர்ச்சியா?
Image Credit : x

ஆன்மிக நிகழ்வில் அநாகரிக கவர்ச்சியா?

பக்திக்குரிய வழிபாட்டுத் தலங்களையும் புனித நிகழ்வுகளையும் கவர்ச்சி மேடைகளாக மாற்ற நினைக்கும் பாலிவுட் பிரபலங்களின் போலித்தனத்திற்கு இணையவாசிகள் சவுக்கடி கொடுத்து வருகின்றனர். மும்பையில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில், பாலிவுட் நடிகை திஷா பதானி அணிந்து வந்த கவர்ச்சி ஆடைதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஆடைக்கட்டுப்பாடு அவசியம்: இடத்திற்கு தகுந்த மரியாதை எங்கே?
Image Credit : x

ஆடைக்கட்டுப்பாடு அவசியம்: இடத்திற்கு தகுந்த மரியாதை எங்கே?

விழாவில் திஷா பதானி கலந்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, அவர் அணிந்திருந்த ஆழமான கழுத்துப்பகுதி (plunging neck) கொண்ட ரவிக்கையும், கவர்ச்சி சிவப்பு புடவையும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது கடவுளை வணங்கும் வழிபாட்டு நிகழ்வா அல்லது கேமராக்களுக்கு போஸ் கொடுக்கும் ஃபேஷன் ஷோவா? என்று மக்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

மற்ற விருந்தினர்கள் அனைவரும் கண்ணியமான பாரம்பரிய ஆடைகளில் வந்திருக்க, எல்லை மீறிய கவர்ச்சியில் வந்த திஷாவால் நாகரிகமாக உடையணிய முடியாதா என சாடியுள்ளனர். மேலும், மத வழிபாட்டு நிகழ்வுகளுக்கு என கட்டாயம் தனி ஆடைக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். நான் ஆடைக்கு எதிரானவன் அல்ல; ஆனால் பக்தி பரவசத்தோடு நடத்தப்படும் பூஜைக்கு இந்த கவர்ச்சி ஃபேஷன் கொஞ்சமும் பொருந்தாது என்று காட்டமாக விமர்சித்துள்ளனர்.

Related Articles

Related image1
Money Management: பாக்கெட்டை காலி பண்ற 'சைலன்ட் கில்லர்' செலவுகள்... பணம் பெருக சாணக்கியர் தரும் 5 பொன்னான ரகசியங்கள்!
Related image2
விஜய் - அஜித் விலகியதால் அதிர்ஷ்ட காற்று: ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வசூல்? பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைப்பாரா சூர்யா!
33
தனிநபர் சுதந்திரம் என்ற பெயரில் வரம்பு மீறலா?
Image Credit : x

தனிநபர் சுதந்திரம் என்ற பெயரில் வரம்பு மீறலா?

ஒரு தரப்பினர் ஆடை தேர்வு என்பது தனிநபர் உரிமை; அதை வைத்து நம்பிக்கையை மதிப்பிடக் கூடாது என வழக்கம்போல முட்டுக்கொடுக்கப் பார்த்தாலும், மக்கள் அதை முற்றிலுமாக நிராகரித்துள்ளனர். X தளத்தில் கொந்தளித்த ஒருவர், முதலில் கிருத்தி சனோனின் நகை விளம்பர சர்ச்சை, இப்போது திஷா பதானி. இவர்களுக்கு இந்து பண்டிகைகளின் புனிதம் குறித்து துளியும் அக்கறையோ மரியாதையோ கிடையாது என்று லெப்ட் ரைட் வாங்கியுள்ளார்.

அதற்கு பதிலளித்த மற்றொருவர், பண்டிகை என்பது தூய பக்திக்கும் கலாச்சார மரியாதைக்கும் உரிய இடம்; புனிதமான பந்தல்களை கவர்ச்சி மேடையாக்கி சீரழிக்காதீர்கள் என்று முகத்தில் அறைந்தாற்போல் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் கிருதி சனோனின் நகை விளம்பரம் மூலமாக ஆடை சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது திஷா பதானியின் இந்த எல்லை மீறிய ஆடைத் தேர்வும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிரபலங்கள் பக்தி சார்ந்த நிகழ்வுகளுக்கு வரும்போது, கலாச்சாரத்திற்கும் ஆன்மிகத்திற்கும் உரிய கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை இணையத்தில் தீயாகப் பற்றி எரிகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

M
Meenakshisundaram
சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Recommended image2
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு
Recommended image3
Rashmika : நேஷனல் அவார்டை தட்டித்தூக்க ரெடியான ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா... பிரம்மாண்டமாக உருவாகும் பாடகியின் பயோபிக்
Related Stories
Recommended image1
Money Management: பாக்கெட்டை காலி பண்ற 'சைலன்ட் கில்லர்' செலவுகள்... பணம் பெருக சாணக்கியர் தரும் 5 பொன்னான ரகசியங்கள்!
Recommended image2
விஜய் - அஜித் விலகியதால் அதிர்ஷ்ட காற்று: ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வசூல்? பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைப்பாரா சூர்யா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved