MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Business
  • Money Management: பாக்கெட்டை காலி பண்ற 'சைலன்ட் கில்லர்' செலவுகள்... பணம் பெருக சாணக்கியர் தரும் 5 பொன்னான ரகசியங்கள்!

Money Management: பாக்கெட்டை காலி பண்ற 'சைலன்ட் கில்லர்' செலவுகள்... பணம் பெருக சாணக்கியர் தரும் 5 பொன்னான ரகசியங்கள்!

Money Management: பணம் சம்பாதிப்பதை விட அதை சரியாக நிர்வகிப்பதே நிதி சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். மாதக் கடைசியில் நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு தேவையற்ற செலவுகளே முக்கிய காரணம். பணத்தை சேமிக்க சாணக்கியர் காட்டும் 5 பொன்னான வழிகள் பற்றி பார்ப்போம்.

3 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 15 2026, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சாணக்கியர் காட்டும் அசாத்திய நிதி மேலாண்மை ரகசியங்கள்
Image Credit : Gemini

சாணக்கியர் காட்டும் அசாத்திய நிதி மேலாண்மை ரகசியங்கள்

Money Management: மாதக் கடைசியில் சம்பளம் எங்கே போனது என்றே தெரியவில்லை என்று புலம்புபவரா நீங்க? கவலைப்படாதீர்கள்; பிரச்னை உங்க வருமானம் குறைவாக இருப்பது அல்ல, உங்க் கையை மீறிப் போகும் தேவையற்ற செலவுகள்தான்!

பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த பொருளாதார மேதையான சாணக்கியர், செல்வத்தைப் பெருக்குவதற்கு முன்வைத்த முதல் விதி: தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்து என்பதுதான். 1 ரூபாயை சேமிப்பது, இன்னொரு ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம் என்கிறது அவரது ராஜதந்திரம். உங்க உழைப்பின் பலன் வீணாகாமல், சிறிய சேமிப்பும் மலைபோல் பெருக என்ன செய்ய வேண்டும்? விரிவாகப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தேவையற்ற செலவுகளை ஏன் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்?
Image Credit : Gemini

தேவையற்ற செலவுகளை ஏன் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்?

ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது முக்கியமல்ல; அதில் எஞ்சியதை எப்படிச் சேமித்து, முதலீடு செய்கிறார் என்பதே அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அற்பமாக நினைத்துக் கைநழுவும் சிறிய தொகைகள், பல ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுக்கும். அதே பணத்தை முறையாக முதலீடு செய்திருந்தால், கூட்டு வளர்ச்சியின் (Power of Compounding) மாயாஜாலத்தால் அதுவே மிகப்பெரிய செல்வமாக மாறியிருக்கும்.

36
பணத்தை விழுங்கும் 8 தவறுகள் - கவனிக்க வேண்டிய நிதி எச்சரிக்கைகள்
Image Credit : Gemini

பணத்தை விழுங்கும் 8 தவறுகள் - கவனிக்க வேண்டிய நிதி எச்சரிக்கைகள்

மற்றவர்களுக்காக ஆடம்பரம்: ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவது நிதிச்சறுக்கலின் தொடக்கம். தேவை எது, வெறும் ஆசை எது என்பதைப் பிரித்துப் பாருங்கள். பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகப் பந்தா பண்ணினால், இறுதியில் மிஞ்சுவது கடன் சுமையும் மன அழுத்தமும் மட்டுமே.

திட்டமில்லாத திடீர் ஷாப்பிங்: ‘ஆஃபர்’, ‘டிஸ்கவுண்ட்’, ‘மெகா சேல்’ என்ற விளம்பர பலகைகளைப் பார்த்ததும் அள்ளிப்போடுவது பெரும் பலவீனம். ஒரு பொருளை வாங்கும் முன், இது உண்மையில் எனக்கு இப்போது அவசியமா? என்று ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள்.

வருமான உயர்வு தரும் போலி மயக்கம்: சம்பளம் உயர்ந்த உடனேயே புதிய கார், லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன், ஆடம்பர வீடு என வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது தவறு. வருமானம் எகிறும்போது, கூடவே சேமிப்பும் முதலீடும் அதே வேகத்தில் அதிகரிக்க வேண்டும்.

கடன் வாங்கி பகட்டு காட்டுதல்: வீடு, கல்வி, தொழில் போன்ற சொத்துகளை உருவாக்கும் கடன் பயனுள்ளது. ஆனால், மதிப்பு தேய்ந்துபோகும் செல்போன், கார் போன்ற ஆடம்பரங்களுக்காகக் கடன் வாங்குவது, உங்க் எதிர்கால உழைப்பை இன்றே அடமானம் வைப்பதற்குச் சமம்.

46
பணத்தை சரியான வழியில் வளர்ப்பது எப்படி?
Image Credit : Asianet News

பணத்தை சரியான வழியில் வளர்ப்பது எப்படி?

கண்ணுக்கு தெரியாத குட்டிச் செலவுகள்: தினசரி தேநீர், தின்பண்டங்கள், பயன்படுத்தாத ஓடிடி மற்றும் இணைய சந்தாக்கள் (Subscriptions) மாத இறுதியில் கணக்கு் பார்த்தால் மலைக்க வைக்கும். இவற்றை முறைப்படுத்தினாலே கையில் கணிசமான பணம் தங்கும்.

முதலீட்டு பேராசை & மோசடி வலைகள்: உழைக்காமல் ஒரே இரவில் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற ஆசைதான் மோசடித் திட்டங்களுக்கும், சூதாட்டங்களுக்கும் பாதை அமைக்கிறது. நிலையான செல்வம் உருவாகப் பொறுமையும், ஒழுங்கான நீண்டகால முதலீடும் அவசியம். குறுக்கு வழிகளைத் தவிருங்கள்!

முதலில் செலவு பிறகு சேமிப்பா?: செலவு செய்தது போக மீதமுள்ளதைச் சேமிக்க நினைத்தால் மிஞ்சுவது பூஜ்ஜியமே. வருமானம் வந்த உடனே, ஒரு குறிப்பிட்ட பங்கைச் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள பணத்தில்தான் செலவுகளைத் திட்டமிட வேண்டும்.

விழாக்களில் போலி கெளரவம்: திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மற்றவர்களை மிஞ்ச வேண்டும் எனச் செய்யும் பகட்டுச் செலவுகள் தேவையற்ற சுமை. மரியாதை என்பது ஆடம்பரத்தில் இல்லை; எளிமையிலும் நற்குணத்திலும் மட்டுமே நிலைத்திருக்கும்.

56
அவசரகால நிதி இல்லையென்றால் ஆபத்து!
Image Credit : pinterest

அவசரகால நிதி இல்லையென்றால் ஆபத்து!

புதிய திறன் மேம்பாடு, கல்வி, நல்ல புத்தகங்கள் வாங்குவது மற்றும் அறிவை வளர்ப்பதற்கு செய்யும் செலவுகளைச் சேமிப்புக் கணக்கில் அடக்கக் கூடாது. இவை எதிர்காலத்தில் பல மடங்கு வருமானத்தைத் தரும் மிகச்சிறந்த முதலீடுகள். ஆடம்பரத்தைக் குறைத்து, அறிவுக்கான செலவுகளைத் தாராளமாக மேற்கொள்ளுங்கள்.

திடீர் மருத்துவச் செலவு, வேலை இழப்பு அல்லது குடும்ப அவசரங்களின் போது சேமிப்பு கையில் இல்லையென்றால், அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் கொடிய நிலைக்குத் தள்ளப்படுவோம். எனவே, ஒவ்வொரு மாதமும் சிறிதளவாவது சேமித்து ஒரு பாதுகாப்பான அவசரகால நிதியை' (Emergency Fund) உருவாக்குவது நிதிப் பாதுகாப்பின் அஸ்திவாரம்.

66
சாணக்கியரின் 5 பொன்மொழிகள்
Image Credit : Gemini

சாணக்கியரின் 5 பொன்மொழிகள்

எப்போதும் வருமானத்தைவிடக் குறைவாகவே செலவிடுங்கள்.

தேவையற்ற கடன்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

நிகழ்கால ஆடம்பரத்தைவிட எதிர்காலப் பாதுகாப்பிற்குச் சேமித்திடுங்கள்.

சேமிப்பை சும்மா வைக்காமல், வளரக்கூடிய முதலீடுகளில் செலுத்துங்கள்.

கண்மூடித்தனமான ஆசையைவிட, அத்தியாவசியத் தேவைக்கு முன்னுரிமை தாருங்கள்.

அதிகமாகச் சம்பாதிப்பவன் மட்டுமே பணக்காரன் அல்ல; சம்பாதித்ததை மதிப்போடும் மதியோடும் நிர்வகிப்பவனே உண்மையான செல்வந்தன். இந்த நிதிக் கொள்கைகளைக் கடைப்பிடித்தால், உங்க் சிறு துளி சேமிப்பும் பெருவெள்ளமாக மாறும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
House Construction : 1000 சதுர அடியில் மாடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு விவரம் இதோ!
Recommended image2
Health Insurance : ஒரு ஹாஸ்பிடல் பில்லுக்கு இரண்டு இன்சூரன்ஸ்களை பயன்படுத்துவது எப்படி? இப்படித்தான் செய்யணும்!
Recommended image3
Bank Loan: வங்கிக் கடன் வாங்குவோர் கவனத்திற்கு... இனி அலைச்சல் இல்லை... எல்லாமே டிஜிட்டல் மயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved