- Home
- Cinema
- ஒரே வார்த்தை..! கவுண்டமணியால் சீரழிந்த மொத்த சினிமா வாழ்க்கை..? 48 வயதில் கர்ப்பம் என கூறிய நடிகை ஷர்மிலி!
ஒரே வார்த்தை..! கவுண்டமணியால் சீரழிந்த மொத்த சினிமா வாழ்க்கை..? 48 வயதில் கர்ப்பம் என கூறிய நடிகை ஷர்மிலி!
தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்காக நடிகை வனிதா விஜயகுமார், காமெடி நடிகை ஷர்மிலியை பேட்டி கண்டுள்ளார். அப்போது தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றியும், தற்போது கர்ப்பமாக இருக்கும் தகவல் பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஷர்மிலி இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும், ஒரு சில நடிகர்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைவதில்லை. அவர்கள் நடித்தாலும், நடிக்காவிட்டாலும், அவர்களுக்கான ரசிகர்கள் எப்போதுமே இருந்து கொண்டிருப்பார்கள். அப்படிதான் நடிகர் செந்தில், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், போன்ற நடிகர்களின் காமெடிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
Goundamani
அப்படி திரையுலகில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளவர் கவுண்டமணி. 84 வயதிலும் செம்ம ஃபிட்டாக இருக்கும் இவர், தற்போது கூட ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவரால்தான் தன்னுடைய திரை உலக வாழ்க்கையே நாசமானது என நடிகை ஷர்மிலி பேட்டி ஒன்றில் கூறி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தமிழில் ஹீரோவாக அறிமுகம்! உச்சாகத்தில் ரசிகர்கள்!
ஷர்மிலி நடிகர் கவுண்டமணியுடன் மட்டும் சுமார் 27 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரை கேட்டுக்கொண்டு தான் அவர் மற்ற படங்களுக்கு கூட டேட் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததாகவும், இவரே தானாக டேட் கொடுத்து விட்டால், அந்த தேதியில் எனக்கு ஷர்மிலி டேட் கொடுத்துள்ளார் என கூறி ரஜினிகாந்த் முதல் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க விடாமல் கெடுத்து விடுவாராம். இதனால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் டான்ஸ் ஆடும் வாய்ப்பையும் இழந்துள்ளார்.
ஒரு நிலையில் ஷர்மிலி, நடிகர் கவுண்டமணியுடன் மட்டுமே நடிப்பார் என கிசுகிசு எழுந்துள்ளது. ஆரம்பத்தில் ஷர்மிலி கவுண்டமணியுடன் நடிக்க தயங்கிய நிலையில், பின்னர் ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இணைந்து நடித்த காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக கவுண்டமணி தன்னுடைய பல படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கியுள்ளார்.
தன்னையும் - கவுண்டமணியையும் பற்றி தேவையில்லாத கிசுகிசுக்கள் எழுந்த போது, இனி கவுண்டமணியுடன் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என ஷர்மிலி கூறியுள்ளார். இந்த ஒற்றை வார்த்தையை அவர் கூறிய பின்னர், தன்னுடைய படங்களில் அவர் நடிக்க புக் ஆகி இருந்த படங்களில் இருந்து தூக்கியது மட்டும் இன்றி, மற்ற படங்களின் வாய்ப்புகளும் கிடைக்காத அளவுக்கு செய்து விட்டாராம்.
இதனால் தன்னுடைய திரையுலக வாழ்க்கையே நாசமானது என கூறியுள்ளார் ஷாமிலி. மேலும் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருந்த அவருக்கு 40 வயதுக்கு மேல் தான், திருமணம் செய்து கொள்ள வேண்டும், தனக்கு என ஒரு ஆண் துணை வேண்டும் என்கிற எண்ணமே வந்ததாகவும், இதனால் 40 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொண்டு தற்போது தன்னுடைய கணவருடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஷாமிலி தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், வனிதா விஜயகுமாரின் பேட்டியின் போது கூறியுள்ளார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.