பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தமிழில் ஹீரோவாக அறிமுகம்! உச்சாகத்தில் ரசிகர்கள்!
2கே கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் டிடிஎஃப் வாசன் தற்போது தமிழில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிவேகமாக ரோட்டில் வண்டி ஓட்டி, யூடியூப் பாக்கத்தில் அதன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் கோவையை சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது வீடியோக்கள் பைக் ரைடிங்கை விரும்பும் 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம்.
ஜிபி முத்து, ரவீனா தாஹா போன்ற பிரபலங்களை பைக்கில் அமர வைத்து... அதி வேகமாக வண்டியை ஓட்டி அவர்களை கதற விட்டுள்ளார். மேலும் அடிக்கடி டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குகிறார் என பல்வேறு புகார்கள் எழுந்து, அபராதம் விதித்ததை தாண்டி கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளார்.
பல பிரச்சனைகள் தன்னை சூழ்ந்தாலும், செம்ம கெத்தாக அனைத்தையும் சமாளித்து வரும் டிடிஎஃப் வாசன், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வரும் 29ம் தேதி, டிடிஎஃப் வாசனின் பிறந்தநாளன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் டிடிஎஃப் வாசனின் ரசிகர்களை உச்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.