ஆசைக்கு அளவு வேண்டாமா? ஒரே ஒரு ஹிட்... தாறுமாறா சம்பளத்தை உயர்த்திய கவின்! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!
பிக்பாஸ் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான, 'டாடா' திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில்... அடுத்தடுத்த படங்களில் நடிக்க சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் போலவே, விஜய் டிவி தொலைக்காட்சியில் இருந்து, வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து... தன்னுடைய முதல் வெற்றியை திரையுலகில் பதிவு செய்துள்ளார் கவின். 'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்ட கவின், இதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில், வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
இதையடுத்து இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கவின், கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆன நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் பெரியளவில் வரவேற்பை பெறாததால், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். அந்நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய ஒரு சில நாட்களில், கவினை காதலிப்பது போல் அபிராமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் சாக்ஷி அகர்வால் கவின் மீது காதல் வயப்பட, கவினோ லாஸ்லியாவுக்கு ரூட்டு போட்டதால்... பிக்பாஸ் வீடே ரணகளமாக மாறியது.
ஆரம்பத்தில் கவினுக்கு எதிராக குரல் உயர்த்திய பலர், நாட்கள் செல்ல செல்ல அவர் நடந்து கொண்ட விதத்தையும், விட்டுக்கொடுக்கும் குணத்தையும் பார்த்து கவின் தான் டைட்டில் வின்னராக மாற வேண்டும் என கூறினர். ஆனால் கவின் லாஸ்லியா பைனல் செல்ல வேண்டும் என்பதற்காக... பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதுமே லாஸ்லியா - கவின் இருவரும் தங்களுடைய காதலை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தங்களின் கேரியரில் கவனம் செலுத்த துவங்கி விட்டனர்.
அந்த வகையில் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடித்த லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, இவர் நடிப்பில் சமீபத்தில், வெளியான 'டாடா' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படஙக்ளில் நடிக்க கதை கேட்டு வரும் கவின் தன்னுடைய சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தி விட்டதாக புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அடடா... படிப்பிலும் நடிகை தேவயானி பொண்ணு சமத்து தான்! +2 மதிப்பெண் குறித்து வெளியான தகவல்!
AK61 update
அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், முன்பு ஒரு கோடி வரை சம்பளம் கேட்ட கவின், அதிரடியாக 2 கோடி சம்பளம் கேட்டிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளார்களாம். குறிப்பாக சில தயாரிப்பாளர்கள் கவினை நடிக்க வைப்பதில் இருந்து பின் வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு ஹிட் கொடுத்துட்டு இவ்வளவு ஆசையா? பார்த்து பேராசை... பெரு நஷ்டம் ஆகிடப்போகுது இது தான் நெட்டிசன்களின் மயின்ட் வாய்ஸ்.