உடல் எடை கூடி... வேற மாதிரி லுக்கில் மிரள வைக்கும் சூர்யா! ரசிகர்களை ஆச்சர்யப்படவைத்த லேட்டஸ்ட் புகைப்படம்!
நடிகர் சூர்யா 'கங்குவா' படத்திற்காக, உடல் எடையை கூட்டி , வேற மாதிரியான லுக்குக்கு மாறியுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் சூர்யா, தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் தாறுமாறு ஹிட் அடித்ததோடு, பல்வேறு விருது விழாக்களிலும் கலந்து கொண்டு அவார்டுகளையும், பதக்கங்களையும் கைப்பற்றியது. குறிப்பாக சூரரை போற்று படத்திற்காக சூர்யா சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.
இதை தொடர்ந்து தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்த படத்தை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். புராண கதைகளை மையமாக வைத்து பேண்டஸி கதையம்சத்துடன் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
3டி தொழில்நுட்படுத்துடன், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் இந்த படத்தை... ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. அங்கு வரலாற்று சம்பவங்கள் தொடர்பான காட்சிகள் தற்போது படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்து வரும் நிலையில்... கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டுவதற்காக தற்போது தன்னுடைய உடல் எடையை கூட்டியுள்ளார். இதனை உறுதி படுத்தும் விதமாக, கொடைக்கானலில் ரசிகர்களுடன் சூர்யா - ஜோதிகா எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அடடா... படிப்பிலும் நடிகை தேவயானி பொண்ணு சமத்து தான்! +2 மதிப்பெண் குறித்து வெளியான தகவல்!
கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இதனை 10 மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கங்குவா படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளது. அதே போல் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு இப்படம் 500 கோடிக்கு பிஸ்னஸ் ஆகியுள்ளதாக சில பிரபலங்கள் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.