MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடடா... படிப்பிலும் நடிகை தேவயானி பொண்ணு சமத்து தான்! +2 மதிப்பெண் குறித்து வெளியான தகவல்!

அடடா... படிப்பிலும் நடிகை தேவயானி பொண்ணு சமத்து தான்! +2 மதிப்பெண் குறித்து வெளியான தகவல்!

நடிகை தேவயானியின் மகள் இனியா இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், அவரின் மதிப்பெண் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : May 09 2023, 11:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Pawan Kalyan Heroines

Pawan Kalyan Heroines

மும்பையைச் சேர்ந்த நடிகை தேவயானி, பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் எதார்த்தமான அழகால் ரசிகர்களை கவர்த்திழுத்தவர். பெங்காளி மொழி படத்தில் அறிமுகமான நடிகை தேவயானி, பின்னர் மலையாள மொழி படங்களில் நடித்தார். தமிழில் 'தொட்டா சிணுங்கி' என்கிற படத்தில் அறிமுகமான  தேவயானிக்கு ஜோடியாக நடிகர் பிரபுதேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத் ஹீரோவாக நடித்திருந்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இந்த படத்தை தொடர்ந்து கல்லூரி வாசல் படத்தில் நடித்தார். 2 படங்கள் நடித்தும் தமிழ் ரசிகர்கள் மனதில் இவரால் நிலையான இடத்தை பிடிக்கமுடியவில்லை. இந்த படங்களை அடுத்து தேவயானி நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த 'காதல் கோட்டை' திரைப்படம், இவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. மேலும் இந்த படத்திற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருதையும் பெற்றார். அதே போல்  சிறந்த நடிகைக்கான ஃபிலிம் சார் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

மனோ பாலாவின் இறுதி நாட்கள்... அப்பாவை சாப்பிட வைக்க பாட்டு பாடிய மகன் ஹரிஷ்! கண் கலங்க வைக்கும் வீடியோ!

 
37

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக ஆதிக்கம் செலுத்த துவங்கினார் தேவியானி. அந்த வகையில் இவர் குடும்ப குத்து விளக்காகவும், அதிகம் கவர்ச்சி காட்டாத கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தது தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்தினார். 

 
47

மேலும் இவர் நடிப்பில் வெளியான சூரிய வம்சம், கிழக்கும் மேற்கும், நினைத்தேன் வந்தாய், பூந்தோட்டம், புதுமைப்பித்தன், பாட்டாளி, அப்பு, பிரண்ட்ஸ், போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற... போண்டா மணி மகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்!

57

அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த், என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய தேவயானி, சின்னத்திரையில் கவனம் செலுத்த துவங்கினார். இவர் சின்ன திரையில் நாயகியாக நடித்த கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆறு வருடங்களுக்கு மேல் இந்த சீரியல் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

67

இதைத்தொடர்ந்து இனியா - பிரியங்கா என இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான தேவயானி, சிறந்த கதாபாத்திரங்கள் வந்தால் மட்டுமே அதனை ஏற்று நடிக்கிறார். மற்றபடி சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கூட மாரி சீரியலில் முத்துப்பேச்சு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடற்கரையை ஒட்டி... 3BHK லக்ஷுரியஸ் ஃபிளாட் வாங்கிய சமந்தா! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..

77

இந்நிலையில் தேவயானி மகள் இனியா இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில், அவரின் மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இனியா 600 க்கு 498 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரசிகர்கள் தேவயானியின் மகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved