கடற்கரையை ஒட்டி... 3BHK லக்ஷுரியஸ் ஃபிளாட் வாங்கிய சமந்தா! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..
நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்பு, அவருடன் ஒன்றாக இருந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பங்களாவில் வசித்து வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஃபிளாட் வாங்கியுள்ளதால், தற்போது வசித்து வரும் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Samantha
தென்னிந்திய திரை உலகில், பான் இந்தியா பிரபலமாக அறியப்படுபவர் சமந்தா. சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஜெயபெரிய ஆரஞ்ச் கன்ட்ரியில் மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட, டூப்லெஸ் லக்ஷுரியஸ் ஃபிளாட் ஒன்றை வாங்கியுள்ளதாக ஊடகங்களில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த அபார்ட்மெண்டில் 13வது மாடியில் சமந்தா தனக்கான பிளாட்டை வாங்கி உள்ளார். 7944 சதுர அடி பரப்பளவில் இந்த அப்பார்ட்மெண்ட் அமைந்துள்ளது. மேலும் இவர் வாங்கி உள்ள புதிய வீட்டில், ஆறு ஸ்லாட்டுகளுடன் கூடிய மூன்று படுக்கையறைகள் உள்ளதாகவும், இந்த வீட்டில் மதிப்பு சுமார் 7.8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் சமந்தா மும்பையில், ரூபாய் 15 கோடி மதிப்பிலான அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வீடு இருக்கும் போதே மீண்டும் மற்றொரு வீட்டை ஏன் வாங்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோல் சமந்தா ஜூப்ளிக் ஹில்ஸ் பகுதியில் தற்போது வசித்து வரும் வீட்டை, சமந்தா சந்தை மதிப்பை விட அதிக பணம் கொடுத்து வாங்கினாராம். இந்த வீட்டின் மதிப்பு இப்போது சுமார் 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தன்னுடைய கணவர், நாக சைதன்யாவுடன் இணைந்து இந்த வீட்டை வாங்கினார் சாம். சைதன்யாவை விட இவர் தான், இந்த வீட்டில் அதிக பணத்தை முதலீடு செய்ததாகவும், இதன் காரணமாகவே... நாக சைதன்யா இந்த வீட்டை சமந்தாவிடவே ஒப்படைத்து விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதே போல் சைதன்யா சமந்தாவும் பிரிந்த பின்னர் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் அமைத்துள்ள, தன்னுடைய தந்தையின் வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் அதே பகுதியில் புதிய ஃபிளாட் ஒன்றை வாங்கியதாக கூறப்பட்டது.
திடீர் என சமந்தா, ஹைதராபாத்தில் மற்றொரு வீட்டி கோடி கணக்கில் பணம் செலவு செய்து வாங்கியுள்ளதால், தற்போது வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற உள்ளாரா? என்கிற என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன தான் நடக்குது என பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் சமந்தா தற்போது பிரியங்கா சோப்ரா நடித்த வெளியான, சீட்டாடல் தொடரின் இந்திய பதிப்பில் நடித்து வருகிறார். அதே போல் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக, குஷி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.