MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் அசீமுக்கு அடித்த ஜாக்பார்ட்! சூப்பர் ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில்... ஹீரோ அவதாரம் எடுக்கிறார்!

பிக்பாஸ் அசீமுக்கு அடித்த ஜாக்பார்ட்! சூப்பர் ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில்... ஹீரோ அவதாரம் எடுக்கிறார்!

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னரான அசீம், தற்போது வெள்ளி திரையில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : May 09 2023, 01:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வதன் முக்கிய காரணமே, வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக தான். அந்த கனவு சிலருக்கு நிஜமானாலும், பலருக்கு ஏனோ சரியான வாய்ப்புகள் அமைவதில்லை. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இவ்வளவு ஏன்? வெள்ளித்திரையில் ஹீரோ, ஹீரோயினாக, நடித்து பிக் பாஸ் வீட்டிற்குள் தங்களுடைய அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அடி எடுத்து வைத்த, பிரபலங்கள் மற்றும் டைட்டில் கைப்பற்றிய ரித்விகா, ஆரி ஆகியோருக்கு கூட இன்னும் திருப்புமுனையை ஏற்படுத்தும் படியான படங்கள் அமையவில்லை என்றே கூறலாம்.

உடலில் சேற்றை பூசிக்கொண்டு... கடலில் ஆனந்த குளியல் போட்ட நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா! வைரலாகும் போட்டோஸ்!

38

மேலும் ஆரவ் போன்ற சில பிரபலங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வாய்ப்பு கிடைத்தும், சரியான படங்களை தேர்வு செய்யாத காரணத்தால்...  தற்போது வரை அவர்களால் வெள்ளித்திரையில் மின்ன முடியவில்லை. அதே நேரம் ஹரிஷ் கல்யாண், ரைசா, கவின், வனிதா விஜயகுமார், ஷிவானி, ரம்யா பாண்டியன் போன்ற சிலருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிதும் கை கொடுத்தது.
 

48

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 போட்டியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களின் ஒருவர் அசீம். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாளிலிருந்து, இவர் சண்டை போடாத நாளும்... பிரச்சனை செய்யாத நாளும் இல்லை என்று கூறலாம். சண்டை போட்டால் தான் பிக் பாஸ் ப்ரோவில் இடம் பெற முடியும் என்பதை நோக்கமாக வைத்து இவர் சண்டை போடுவதாகவும் இவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என சிலர் கொந்தளித்தனர்.

நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை பட்ட த்ரிஷா! பொசுக்குன்னு இப்படி சொல்லி குந்தவையை அப்செட்டாக்கிய மணிரத்னம்
 

58

அதேநேரம் மற்றொரு தரப்பினர், பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் இருப்பதால்தான் இந்த நிகழ்ச்சியை ஏதோ பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது என அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். 

68

அசீமை தாண்டி விக்ரமனுக்கு ஆதரவு இருந்த போதிலும், கடைசி நேரத்தில் அரசியல் கட்சி ஓவராக விக்ரமனுக்கு சப்போர்ட் செய்ததன் விளைவு, விக்ரமனுக்கு விழ வேண்டிய ஓட்டுக்கள் அசீமுக்கு விழுந்தது. இதன் காரணமாக அசீம் டைட்டில் வின்னராகவும், அறம் வெல்லும் விக்ரமன் இரண்டாவது இடத்தையும் பிடித்தார்.

திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து முடிவெடுத்த விஜய் டிவி சீரியல் ஜோடி? திருமண போட்டோவை நீங்கியதால் அதிர்ச்சி!

78

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அசீமை தேடி சில வாய்ப்புகள் வந்த போதும், அதனை ஏற்காத அவர்... தற்போது பிரபல சூப்பர் ஹிட் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில்,  நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தான் அசீம் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறாராம்.
 

88

இந்த படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் கிராமத்து கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதை போல் இப்படத்தின் நாயகி, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேடுதல்களும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  அசீம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படியோ அடித்து பிடித்து டைட்டில் கைப்பற்றியது போல், ஒரு ஹீரோவாகவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved