நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை பட்ட த்ரிஷா! பொசுக்குன்னு இப்படி சொல்லி குந்தவையை அப்செட்டாக்கிய மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை த்ரிஷா நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த நிலையில், மணிரத்தினம் அவரது ஆசையை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
கல்கி வரலாற்று சான்றுகளை அடிப்படையாக வைத்து எழுதிய புனையப்பட்ட நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை மையமாக வைத்து, இரண்டு பாகங்களாக மணிரத்னம் இயக்கி இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை எம்ஜிஆர், கமலஹாசன், போன்ற ஜாம்பவான்கள் திரைப்படமாக எடுக்க முயற்சித்த நிலையில், ஒரு சில காரணங்களால் அவர்களது ஆசைகள் கைகூடாமல் போனது.
'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்குவதே தன்னுடைய கனவாக எண்ணிய இயக்குனர் மணிரத்னம், 20 வருடங்களாகவே இதற்கு ஆயத்தமாகி வந்த நிலையில், லைகா நிறுவனத்தின் துணையோடு இப்படத்தை 500 கோடி பட்ஜெட்டில் படம் ஆக்கினார். இதில் அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், ஆழ்வார் கடியனாக ஜெயராமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும், குந்தவையாக த்ரிஷாவும் வந்திய தேவனாக கார்த்தியும் நடித்திருந்தனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துளிபாலா, பார்த்திபன், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில், ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களையும் மற்றொரு தரப்பினர் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது.
குறிப்பாக பொன்னியின் செல்வன் கதையை படித்த பலர் பல்வேறு காட்சிகள் இப்படத்தில் இடம்பெறவில்லை என தங்களின் அதிருப்தியை தெரிவித்திருந்ததோடு.. இதற்க்கு மூன்றாவது பாகம் கூட வைத்திருக்கலாம் என கூறி வருவதை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம், த்ரிஷாவை இப்படத்தில் நடிக்க வைக்க அழைத்த போது, த்ரிஷா நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது மணிரத்தினம், அந்த கதாபாத்திரத்தை அவருக்கு வழங்க மறுத்துவிட்டாராம்.
நந்தினி கதாபாத்திரத்திற்கு தான் முதலில் ஆள் தேர்வு செய்ததாக கூறியுள்ளார். அதன்படி நந்தினி கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா ராயால் மட்டுமே மிகச் சிறப்பாக செய்ய முடியும் என கூறி பொசுக்குன்னு த்ரிஷாவை அப்செட் ஆக்கி விட்டாராம். இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனினும் ஐஸ்வர்யா ராயை விட குந்தவையாக நடித்த த்ரிஷாவே பலரது மனதையும் கவர்ந்த கதாபாத்திரமாக மின்னினார் என்றால் அது மிகையல்ல.