MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் சாதிக்கு ‘நோ’ சொல்லி... பரியேறும் பெருமாள் பட நாயகி செய்த தரமான சம்பவம்

படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் சாதிக்கு ‘நோ’ சொல்லி... பரியேறும் பெருமாள் பட நாயகி செய்த தரமான சம்பவம்

நடிகை கயல் ஆனந்தி தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கி உள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 07 2023, 09:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. இப்படம் அவருக்கு பெரிய அளவில் பெற்றுத்தராவிட்டாலும், இதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்த கயல் திரைப்படம், அவருக்கு ஒரு அடையாளமாக மாறியது. அப்படத்துக்கு பின்னர் கயல் ஆனந்தி என அழைக்கும் அளவுக்கு பேமஸ் ஆகிவிட்டார் ஆனந்தி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கயல் படத்தின் வெற்றிக்கு பின் வெற்றிமாறனின் விசாரணை, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ஜிவி பிரகாஷ் உடன் திரிஷா இல்லேனா நயன்தாரா, தினேஷ் ஜோடியாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார் கயல் ஆனந்தி.

இதையும் படியுங்கள்...  அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்

34

நடிகை கயல் ஆனந்தி, சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021ம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஓராண்டில் நடிகை கயல் ஆனந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய நடிகை கயல் ஆனந்தி, தற்போது இராவண கோட்டம் என்கிற திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இப்படம் வருகிற மே 12-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

44

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கயல் ஆனந்தி தனது மகன் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழை வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். தான் படித்த புத்தகங்களும், தன் நண்பர்களுடன் ஆன சில உரையாடல்களும் தான் இந்த மாற்றத்திற்கு காரணம் என ஆனந்தி தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் சாதிக்கு எதிரானவராக நடித்திருந்த கயல் ஆனந்தி நிஜ வாழ்க்கையிலும் சாதிக்கு எதிரான நிலைப்பாடடை எடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் இனி திரையிடப்படாது என அறிவிப்பு - காரணம் என்ன?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Recommended image2
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Recommended image3
Now Playing
ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved