அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்
நடிகர் அஜித் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் விடா முயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மே 1ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியானது.
விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ஷூட்டிங் மே மாத மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு இப்படத்தை செம்ம ஸ்பீடாக எடுத்து முடிக்க இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டு உள்ளாராம். அதன்படி விடா முயற்சி பட ஷூட்டிங்கை மொத்தமாக 70 நாட்களில் படமாக்கி முடிக்க அவர் பிளான் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்.. IPL 2023: CSK - MI ஆட்டத்தை காண சேப்பாக்கத்தில் கூடிய நயன்தாரா, தனுஷ், உள்ளிட்ட பல பிரபலங்கள்! போட்டோஸ்!
இதில் மற்றொரு ஆச்சர்யமான தகவல் என்னவென்றால், இப்படத்திற்காக நடிகர் அஜித் வெறும் 40 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதனால் அவர் நடிக்கும் காட்சிகளை விரைவாக எடுத்து முடித்துவிடுவார்கள் என தெரிகிறது. விடா முயற்சி பட ஷூட்டிங்கை முடித்ததும் நடிகர் அஜித் தன்னுடைய உலக பைக் சுற்றுலாவையும் தொடங்க உள்ளார். தற்போது அஜித் நேபாள் மற்றும் பூட்டானில் தன் உலக பைக் சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார்.
அஜித் விடா முயற்சி படத்தின் மொத்த ஷூட்டிங்கே 70 நாட்கள் தான் நடைபெறும் என கூறப்படுவதால், இப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்த துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதனால் அந்த செண்டிமெண்டை பாலோ பண்ணி விடாமுயற்சி திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக அதிகளவு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்.. என் நீண்ட நாள் ஆசை 'கஸ்டடி' படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது! உச்சு குளிர்ந்து பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு!