IPL 2023: CSK - MI ஆட்டத்தை காண சேப்பாக்கத்தில் கூடிய நயன்தாரா, தனுஷ், உள்ளிட்ட பல பிரபலங்கள்! போட்டோஸ்!
ஐபிஎல் 16வது சீசன் போட்டி இன்று சேப்பாக்கத்தில் நடந்த நிலையில், இதனை பல பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்தனர். இதுகுறித்த புகைப்படத்தை தொகுப்பு இதோ...
நம்ப சென்னையில CSK மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதிக்கொள்வது என்றால் சும்மாவா... எப்படியும் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை எப்படியும் கால் கடுக்க வெயிலில் நின்று கூட டிக்கெட் வாங்கி பார்த்து விடுவார்கள்.
அப்படி தன இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த 49ஆவது ஐபிஎல் போட்டி காண ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் குவிந்து, இன்றிய கிரிக்கெட் போட்டியை களைகட்ட வைத்துவிட்டனர்.
Jawan Release Date: ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன் நடித்துள்ள 'ஜவான்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
தன்னுடைய திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளாத நயன்தாரா... கணவர் விக்கி, மற்றும் அனிருத்துடன் இணைந்து CSK மற்றும் MI அணியின் கிரிக்கெட் மேட்சை விசில் போட்டு பார்த்துள்ளார்.
அதே போல் நடிகர் தனுஷ், அர்ச்சனா கால்பதியுடன் IPL விளையாட்டை கண்டு ரசித்தார். இவர்கள் மட்டும் இன்றி, வரலக்ஷ்மி சரத்குமார், நிவேதா பெத்துராஜ், லோகேஷ் கனகராஜ், சனம் ஷெட்டி போன்ற பல பிரபலங்கள் IPL கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தனர்.
அதே போல் முதலமைச்சர் ஸ்டாலின், நடிகரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் போன்ற பல அரசியல்வாதிகளும் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு, கிரிக்கெட் விளையாட்டை பார்க்க வருகை தந்திருந்தனர்.
முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவரில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து எளிய இலக்கை CSK அணிக்கு நிர்ணயித்த நிலையில், இதை தொடர்ந்து விளையாடிய தோனி தலைமையிலான CSK அணி 140 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது.
இது கேவலமான விஷயம்! 30 வருஷமா...மனோ பாலாவுக்கு இருந்த கெட்ட பழக்கம் பற்றி போட்டுடைத்த பயில்வான்!
இதன் மூலம் சிஎஸ்கே அணி சென்னை மண்ணில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசியாக 2010ல் சென்னையில் மும்பை அணியை சிஎஸ்கே அணி வீழ்த்தியிருந்தது. அதன்பின்னர் சென்னையில் மும்பை அணியை சிஎஸ்கே வீழ்த்தியதில்லை. தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் மீண்டும் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதை பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.