ரசிகர் முன்பு கண் கலங்கிய அஜித்..! விடாமல் துரத்திய ரசிகரின் உயிரை காப்பாற்றிய சம்பவம்... வைரலாகும் வீடியோ!
அஜித் பைக் ரெய்டின் போது, தன்னை பின்தொடர்ந்து துரத்தி வந்த ரசிகர் ஒருவரை விபத்து நேராமல், காப்பாற்றும் விதமாக உதவிய வீடியோ மற்றும் ரசிகர் முன்பு கண்கலங்கிய வீடியோ ஆகியவை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித், துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் தன்னுடைய 62 ஆவது படமாக உருவாக உள்ள 'விடாமுயற்சி' படத்திற்காக தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார். அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் இப்படத்தின் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
அதன்படி ஏற்கனவே அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அந்த தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தினை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. அஜித் தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, என அடுத்தடுத்து ஒரே இயக்குனர் இயக்கத்திலும்... ஒரே தயாரிப்பு நிறுவனத்திலும், நடித்து வந்த நிலையில் இம்முறை வேறு ஒரு இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று மேலோங்கியே உள்ளது.
தற்போது 'விடாமுயற்சி' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படப்பிடிப்பு பணிகள் சற்று தாமதம் ஆகி வருவதால், அஜித் வழக்கம்போல தன்னுடைய பைக் ரெய்டு பயணத்தை துவங்கி உள்ளார். அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக நேபால் பகுதியில், அஜித் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவ்வபோது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அஜித் பைக் ரெய்டு செய்த போது... தனக்கு முன்னாள் செல்வது அஜித் என்பதை அறிந்த ரசிகர் ஒருவர், அவர் பின்னாலேயே துரத்திக் கொண்டு செல்ல அஜித் அந்த ரசிகர் விபத்தில் சிக்காமல் இருக்கும் வண்ணமாக கையை அசைத்து, ஸ்லோ செய்ய சொன்னது எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது. மற்றொரு வீடியோவில், அஜித் கண்கலங்கியபடி ரசிகர்கள் முன்பு போட்டோ எடுத்துக் கொள்கிறார். ஆனால் அவர் ஏன் அழுகிறார் என்பது தெரியவில்லை. அஜித்தின் கண்கள் கலங்கி... கண்ணீர் விருதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் ரொம்ப ஷாக் ஆகி பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.
இது கேவலமான விஷயம்! 30 வருஷமா...மனோ பாலாவுக்கு இருந்த கெட்ட பழக்கம் பற்றி போட்டுடைத்த பயில்வான்!
ஏற்கனவே அஜித் தன்னுடைய முதற்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்து விட்ட நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதேபோல் விரைவில் விடாமுயற்சியின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஜித் தற்போது மேற்கொண்டு வரும் பைக்கில் பயணத்தை ஒரு ஆவணப்படமாக மாற்ற முயற்சித்து வருவதாகவும், இதற்கான ஒளிப்பதிவை அஜித் நடித்த துணிவு, வலிமை, பில்லா, போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.