இது கேவலமான விஷயம்! 30 வருஷமா...மனோ பாலாவுக்கு இருந்த கெட்ட பழக்கம் பற்றி போட்டுடைத்த பயில்வான்!
நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், மனோ பாலா 85 வயசு வரைக்கும் வாழ வேண்டிய மனுஷன், என அவருக்கு இருந்த கெட்ட பழக்கம் தான் அவரின் மரணத்திற்கு காரணமா மாறி போச்சு என கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில், இயக்குனர், தயாரிப்பாளர் என்பதை கடந்து அனைத்து ரசிகர்கள் மனதிலும் ஒரு குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் அதிகம் ரசிக்கப்பட்டவர் மனோபாலா. சமீபத்தில் மாரடைப்பு காரணமாக அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்த நிலையில், கல்லீரல் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டார். இதற்காக வீட்டில் இருந்தபடியே, சிகிச்சை எடுத்து வந்த மனோபாலாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இயக்குனர் மணிரத்னம் , நடிகர் கார்த்தி, தளபதி விஜய், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் முதல்வர் ஸ்டாலின், கமல், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் சமூக வலைத்தளம் மூலமாக தங்களின் இரங்கல்களை தெரிவித்தனர்.
பார்ப்பதற்கு படு ஒல்லியாக இருந்தாலும்... தேனீ போல் எந்நேரமும் சுறுசுறுப்புடன் இயக்கி கொண்டிருந்தவர் மனோ பாலா என்றும், ஒரு நாள் கூட உடல் நிலை சரி இல்லை என, அவர் சோர்ந்து உட்கார்ந்து இல்லை என சில பிரபலங்கள் அவரை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் எப்போதும் சர்ச்சையான விஷயங்களை பேசி, சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் பயில்வான் ரங்கநாதன், 85 வயது வரை வாழ வேண்டிய மனுஷன் மனோபாலா இப்படி 69 வயதிலேயே உயிரிழக்க, அவருக்கு இருந்த குடிப்பழக்கம் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
அட கடவுளே... நடிகை வனிதா விஜயகுமாருக்கு இப்படி ஒரு அரியவகை நோய் இருக்கா? அவரே கூறியதகவல் !
இது குறித்து அவர் பேசியுள்ளதாவது, எனக்குத் தெரிந்து அவர் 30 வருடங்களாக மதுவுக்கு அடிமையாக இருந்தார். மதுவிற்கு எதிராக நாம் எவ்வளவு பிரச்சாரம் மற்றும் போராட்டம் நடத்தினாலும் அது மக்களிடம் சென்றடைவது இல்லை. காரணம், இப்போது சாவுக்கும் மது, கல்யாணத்திற்கும் மது என மாறிவிட்டது. விதி வந்து இறப்பது சாதாரணமான விஷயம், குடியால் உடல்நலம் பாதித்து இறப்பது கேவலமான விஷயம் என கூறியுள்ளார்.